95
துக் காட்டினார்; என்ன அந்த விண்ணப்பம்? 'தனித்தனி அந்த அந்த தேசீய இனங்கள், தனித்தனி அரசை நிறுவிக்கொள்வதற்குக் காங்கிரஸ் ஆக்கமளிக்க வேண்டும்,'—என்ற தான் அவர் விண்ணப்பித்துக் கொண்டார்.
"அதைக் கேட்ட நேரு சீறி எழுந்தார்; அளிக்க வேண்டும் என்று கோருவதிலே இருந்து, நாங்கள் ஏதோ அதைப் பிரிப்பதைப் போலல்லவா கேட்கிறீர்கள்? நாங்கள் அதற்காகவே இருக்கிறவர்கள்; தனி அரசு மட்டுமல்ல—அந்தத் தனியரசிலே வாழுகிற ஒரு 'குரூப்' கோஷ்டி, அது தனியரசு வேண்டு மென்று விரும்பினாலும் 'அதில் நூற்றுக்கு நூறு நியாயம் இருக்கிறது;'—என்று பண்டித நேரு பேசினார்.
"அந்தப் பேச்சின் நான்கைந்து வாசகங்களை உங்களுக்கு நான் கூறுகிறேன்; ஏனென்றால் அவர்கள் ஏதோ பெரிய தத்துவங்களை வகுத்துக் கொண்டவர்களைப் போலவும், நாம் ஏதோ 'தத்து பித்து' என்று உணர்ச்சி வேகத்தில் கேட்கக்கூடாதவற்றைக் கேட்டுக்கொண்டிருக்கும் 'தப்பிலி' களைப்போலவும் பல நண்பர்கள் எண்ணி, நம்மை ஏசிப்பேசுகிறார்கள். அவர்களுக்கு விளக்கம் தருவதற்காக, 1945-ம் ஆண்டில் வாழ்ந்த நேரு, பேசியதை இங்கே எடுத்துரைக்கிறேன், நேரு பேசுகிறார், கேளுங்கள்:—
'இந்தியாவிலிருந்து எவராவது பிரிந்து செல்ல விரும்பினால், 'வேண்டாம்' என்று காங்கிரஸ் அவர்களை வேண்டிக்கொள்ளும்; வேண்டிக்கொண்டதற்குப் பின்னும், பிரிந்து தான் செல்லுவோம்' என்று சொன்னால் கண்ணியத்தோடு அதை அனுமதித்துவிடும்.'
"இது பண்டித நேரு பேசியது—1945 ஆகஸ்டு 2-ந் தேதி ஸ்ரீநகரில் பேசினார்.
'காங்கிரஸ் ஏற்கனவே தனித் தனி தேசீய இனங்களுடைய சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டுவிட்டது'—கோபத்தோடு இப்படிப் பேசினாராம் நேரு! ஏன்?