உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

வந்த நேருவின் இராஜ தந்திரத்திற்கு முற்றிலும் முரணான வகையிலும் அவருடைய பேச்சுக்கள் உருவெடுத்திருக்கின்றன.

"ஆந்திர மாநிலம் வேண்டும்—என்ற கிளர்ச்சி நடைபெற்ற போது, பண்டித நேரு எவ்வளவு ஆணவமாகப் பேசினார்! 'முடியாது, முடியாது, முடியாது; யார் அவன்—ஆந்திர மாநிலம் கேட்பவன்? இந்த மக்கள் சபையில்கூட யாரேனும் இருக்கிறார்களா' என்று முறைத்துப் பார்த்து, அதட்டி உட்கார வைத்துக் கொண்டிருந்தார்; அந்நிலையில், பொட்டி சீராமுலு உண்ணா விரதம் தொடங்கி விட்டார்; 'அவருடைய நிலை கவலைக்கிடமா யிருக்கிறது', என்று செய்தி வருகிறது; என்றாலும், மக்கள் சபையில் பிரதமர் நேரு வீர கர்ஜனை புரிந்தார்—'ஆயிரம் பொட்டி சீராமுலுகள் பிணமானாலும்—நான் என்னுடைய நிலையிலிருந்து பிறழமாட்டேன்; தனி மாகாணம் வேண்டும், என்ற கருத்துக் காட்டுமிராண்டித் தனமானது'—என்று குறிப்பிட்டார்.

"ஆனால் பழைய பண்டித நேரு—1945-ல் இருந்த நேரு என்ன சொன்னார்? கம்யூனிஸ்ட் கட்சியைவிட வேகமாக வாதாடினார்—'தனித்தனி மாகாணங்கள் வேண்டு மென்று மட்டுமல்ல; 'தனித்தனி மாநிலங்களாகப் பிரிக்கப்படுபவை, தனி அரசாக வாழ வேண்டும் மென்று விரும்பினாலும் வாழலாம், அதைக் காங்கிரஸ் தடுக்காது—நானிருக்கிற வரையில் தடுக்கவிடமாட்டேன்'—என்று! அந்தப் பேச்சு எங்கே நிகழ்ந்தது என்பதை அறியும்போது இன்னமும் நமக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வரும்.

"காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நிகழ்ந்தது, அந்தப் பேச்சு; அங்கே இருக்கிறது—நமது அனுதாபத்திற்குரிய அரசியல் ஏமாளியான ஷேக் அப்துல்லா இருக்கிறாரே, அவர், கூட்டம் ஒன்றில், நேருவுக்கு ஒரு விண்ணப்பத்தைப் படித்-