உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

என்ன என்றால், ஊர் மக்கள், மாலையில் மஞ்சள் வெயிலில் காய்ந்துகொண்டிருந்ததைக் கண்டான்; மாலை வேளையில் மஞ்சள் வெயில் உடலில் பட்டால், பித்தம் போய்விடும் என்பது மருத்துவ உண்மை ! மருத்துவன் என்ன செய்வான் ! இந்த ஊர் பயனில்லை என்று எண்ணி, வேறு இடம் நாடினானாம்.

தம்பி ! பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட நாளாய், என் நிலை, ஏறக்குறைய, கதையில் குறிப்பிட்டேனே, ஒரு ஊர் மக்கள், அவர்கள் நிலையைப்போல் இருந்து வருகிறது; ஆகவே தூற்றித் துளைக்கலாம் என்று எண்ணுபவர்கள். நான் உங்கள் அன்புக் கரங்களின் அரவணைப்பில் உள்ள காரணத்தால், தொடர்ந்து ஏமாற்றமே காண்கின்றனர்.

என் இயல்போ என்னை எவர் எக்காரணம் கொண்டு, எத்தகைய இழிமொழி கொண்டு தாக்கினாலும், அவர்கள் எப்போதாவது என்னைப்பற்றி ஏதாகிலும் இரண்டொரு நல்ல வார்த்தைகள் சொல்லியிருந்தால், அதை நினைவுபடுத்திக்கொண்டு, மனதுக்கு ஆறுதலும் மகிழ்ச்சியும் தேடிக்கொள்வது வாடிக்கை. அதுமட்டும் அல்ல, அன்று நம்மை எவ்வளவோ அன்புடன் பாராட்டினவர்கள் தானே; இப்போது நாலு கடுமொழி பேசிவிட்டால் என்ன ! போகட்டும் என்று எண்ணிக் கொள்பவன்.

வாழ்க வசவாளர்கள் என்று முன்பு ஒருமுறை நான் எழுதியது, வெறும் சொல்லடுக்கு அல்ல; என் உள்ளக் கிடக்கையைத்தான் குறிப்பிட்டேன்.

சட்டசபையிலே நாம் திறமையுடன் நடந்து கொள்வதில்லை— மந்திரிகளே இடித்துப் பேசி, ஏளனம் செய்யும் நிலைக்குச் சென்றுவிட்டோம்—என்று கண்டிக்கிறார்கள்.

திராவிட நாடு பகற்கனவாகிவிட்டது; தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு, திராவிட நாடு பற்றிப் பேசுவது