இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
127
- பக்ரா—நங்கல் நிர்வாக ஊழல்.
- சிந்திரி தொழிற்சாலையில் காணப்பட்ட சீரழிவு.
- வெளிநாட்டுக் கடன் சுமை அதிகமாகி அழுத்துவது.
- ஏற்றுமதி குறைந்து, இருப்புத் தேய்வது.
- நோட்டுப் பெருக்கத்தால் பண வீக்கம் ஏற்பட்டிருப்பது.
- மறைமுக வரிகளினால் ஏழை மக்கள் துயர் அடைவது.
- வருமான வரி ஏய்க்கும் வன்கணாளரை வீட்டு வைக்கும் கொடுமை.
- முந்திரா போன்றார் தரும் பணம் பெற்றுத் தேர்தல் நிதி குவிக்கும் கேவலத் தன்மை.
- எல்லையில் இடம் பிடித்த சீனரிடம், ஏதும் செய்ய இயலாமல், நேரு திண்டாடித் திணறுவது.
- கரடியாய்க் கத்தினாலும் சேலத்தில் இரும்புத் தொழிற்சாலை அமைக்காத கன்னெஞ்சப் போக்கு.
- சேது சமுத்திர திட்டமும், தூத்துக்குடித் துறைமுகத் திட்டமும் இன்னமும் ஏட்டளவில் இருந்து வரும், உள்ளம் வாட்டிடும், நிலைமை.
- ஒவ்வொரு துறையிலும் ஊழல் அடுக்கடுக்காய் இருப்பதனை, கணக்கு ஆய்வாளர் காட்டி வரும், கொடுமைமிகு சீர்கேடு.
- கொடுமைக்கு ஆளான இலங்கைத் தமிழரின் குரல் கேட்டு உதவி புரிய முன் வராது நேரு பெருமகனார் உள்ள போக்கு.