129
இங்கு தமிழரிடை இப்போது, இந்தியராகுங்கள் என்று இயம்பச் சிறிது கூச்சம் இருக்குமன்றோ! திராவிடர் வேண்டாமென்று, தமிழர் என்ற நிலைகொண்டு, மெள்ள மெள்ள இந்தியராதல் ஒன்றே இவர்க்கு இனி எதிர்காலம்.
வடக்கே வெளியாகும் 'டைம்ஸ் ஆப் இந்தியா' இதழ் நிருபர், பேட்டி கண்டாராம் புதியவரை! பெற்றாராம் அவர் கருத்தை, வெளியிட்டிருக்கின்றார்; படித்தேன்; பதைபதைத்தேன்.
- பொது உடைமையர் போன்றோ சமதர்மவாதி போன்றோ, புரட்சிப் போக்கினர் அல்ல, நாங்கள்.
- எந்த (சமதர்ம) தத்துவமும் பிடித்தலையும் போக்கில்லை, எமக்கு!
- தமிழ்நாடு தனிநாடு ஆகவேண்டும் என்ற ஆர்வமும் எமக்கு இல்லை.
என்றுரைத்தாராம், புதிய கட்சியின் தலைவரவர். வெளி வந்து இருகிழமை ஆகிறது; இதுவரையில், மறுப்பும் வரவில்லை. என் சொல்ல! கைப்புண் காணக் கண்ணாடியா வேண்டும்! உள்ளம் இருப்பது, வடக்கே உள்ள இதழில் வந்தது; மெள்ளமெள்ள இங்கும் அதனை எடுத்தரைக்கப் போகின்றார்; உடன் இருப்போரில் ஏழெட்டும் பேர்கள், இலட்சியம் போற்றிடுவோர்! எங்கே அவர் கோபம் எழுந்திடுமோ, என்ற அச்சம். இல்லையெனில் இப்போதே இயம்பிடுவார் ஜெய்இந்தும்! முன்பே இதை உணர்ந்து மொழிந்த 'மெயில்' இதழும், திராவிடப் பிரிவினையை உதறினார்; தக்க செயல்; என்றாலும், இஃதேனோ, தமிழ்நாடு என்ற ஒரு தத்துவம் பேசுகிறார்; அதற்குப் பொருள் இல்லை; ஆகப்போவதுமில்லை; உடனடியாய் அனைத்தையும்