130
உதறிட அஞ்சி ஒரு பொருளற்ற திட்டத்தைக் காட்டுகிறார் தோழர்கட்கு; சின்னாட்கள் சென்றதும், இதனையும் போட்டிடுவார் மண்மீது—என்றெல்லாம் எழுதிற்று, அதற்கும் மறுப்பு இல்லை, அச்சம்!
அறிவீர், ஐயன்மீர்! இந்தியா என்பது போலி, சூது, சூழ்ச்சி, ஒரு சுரண்டல் யந்திரம்; இதுவே, என் கருத்து.
தமிழர், தனி இனம்—தாழ்ந்த நிலையில் இன்றுளர்—அதற்குக் காரணம் வடவர்.
வடவர் வாழ்த்திட வழி வகுத்ததுதான், இந்திய அரசியல் சட்டமெனும் பொறி.
இதில் சிக்கி இருக்கு மட்டும், தலைநிமிர்ந்து வாழ்ந்திடான் தமிழன் எனும் இனத்தான்.
அவன் மானம் அழிக்கிறார், மொழியைப் பழிக்கின்றார்; வாழ்க்கை வழியை அடைக்கின்றார்.
வளமெல்லாம் வடக்கேதான்; வாட்டம்தான் தமிழர்க்கு; இந்தியா என்பதிலே இதுவும் ஓர் இடம் என்று இயம்புமட்டும், தன்மானமும் இல்லை, தழைத்திடப் போவதில்லை.
வடநாட்டு ஆதிக்கம், அழித்திடவே, இருக்கின்றேன்; வந்துதிவீர் என்னோடு; தனி அரசு காண்பதற்கே!!
என்று இவ்விதமெல்லாம், எடுத்துரைக்க முன்வந்தால், ஏது ஏடுகளிலே இடம்!! எனவேதான் அவை இன்று, வெளியே, காணோம். அம்மட்டோ, தம்பி! திராவிடம் என்றால் கசப்பு—ஆயின், வடநாடு எனின், இனிப்பேயன்றோ, காண்கின்றனர்.
எனவே தம்பி! எனைவிட்டுப் பிரிந்தனரே, என் செய்வேன் என்று எந்தன் மனம் பட்டபாடு மிக அதிகம் என்றா-