30
"ஆகவே, இந்தியாவுக்குப் பெயரளவில் சட்டரூபமாய் வெள்ளையரும் வடவரும் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தத்தால் ஒரு சர்க்கார் என்றாகிவிட்டதே யொழிய, இந்தியர்கள் என்று ஒரு இனம் தோன்றவில்லை. அவர்களுக்கு முன்னும் இருந்ததில்லை. இனியும் தோன்ற வழியில்லை. நமக்குத் தலைவன் வடநாட்டில் இல்லை. வடநாட்டில், வடநாட்டு மக்களுக்குப் பாடுபடும் வடநாட்டுத் தலைவர்கள் தாம் உண்டு. நமக்குத் தலைவர்கள் நம் நாட்டில்தான் தோன்ற முடியும். வீணே வடநாட்டுக்காரர்கள் சிலரை நம் தலைவர்களென நம்புவதும், அங்கு தலைவர்களைத் தேடுவதும் வீண்வேலையாகும். ஆகவே, இன்றைய திராவிட மக்களின் வாழ்க்கை நிலையும், வடவர்கள், அவர்களின் தலைவர்கள் ஆகியோருடைய எண்ணங்களும் செயல்களும் எல்லாம் திராவிடநாட்டுப் பிரிவினை ஒன்றுதான் திராவிடரின் நல்வாழ்வுக்கு வாக்குறுதியாய் இருக்கமுடியும் என்பதையே உறுதிப்படுத்துகின்றன.
"அடுத்து, நம் மக்களிலே சிலருக்கு ஓர் அச்சம் உண்டு. இந்தியா இவ்வளவு பரந்த நாடாய் இருப்பதால்தான் ஒரு பாதுகாப்பு இருக்கிறது. பக்கத்து நாடுகள் படையெடுக்கப் பயப்படுகின்றன. பிரிந்து சிறுசிறு நாடுகளாய்ச் 'சிதறி' விட்டால், பழையபடி ஏதாவது ஒரு அன்னிய அரசு வெள்ளையனைப் போல மீண்டும் அடிமை கொண்டு விடும் என்று அஞ்சுவோரும் உள்ளனர். திராவிட நாடு கூடாதென்பதற்கு அந்த அச்சத்தை வாதமாகப் பயன்படுத்துவோரும் உள்ளனர்.
"இன்றைய உலகு 'பானிப்பட்', 'பிளாசி', 'வந்த வாசி' காலத்திலில்லை. நவாபுகள், சுல்தான்கள் காலமல்ல. இன்றைய உலகில் ஒரு நாட்டின் பாதுகாப்பு அதன் பரப்பு எவ்வளவு என்பதிலேயோ, இராணுவம், விமானங்கள், கப்பல்கள் ஆகியவை எத்தனை உண்டு என்ற கணக்கிலேயோ