உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48


2

"வரது அறைகூவலை நான் ஏற்றுக்கொள்கிறேன். மந்திரி வெங்கடராமன் திராவிடநாடு கோருபவர்களுக்கு விடுத்த அறைகூவலை, மிகுந்த ஆர்வத்தோடு படித்தேன்

"அவர் திராவிட நாடு பிரச்சினையை முன் வைத்துத் தேர்தலுக்கு நிற்பதற்குத் தயாராக இருப்பதாகவும், அப்படித் தேர்தல் நடந்தால் காங்கிரசுக்கு இன்னும் 10 இடங்கள் அதிகம் கிடைக்குமென்று நம்பிக்கை தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. அந்த அறைகூவலை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

"காங்கிரசைவிடப் பெரும்பான்மை இடங்களைச் சட்டசபையில் தி. மு. க.—வினருக்குத் தருவதன் மூலம் வாக்காளர்கள் தி. மு. க—விடம் தெரிவிக்கும் நம்பிக்கையை, மத்திய ஆட்சியிலிருந்து மாநிலம் பிரிவதற்கான வாக்கு என்று மாநில மந்திரி சபையும், மத்திய மந்திரி சபையும் ஏற்றுக்கொள்ளுமா ? அப்படி வாக்காளர்கள் தி. மு. க—விடம் தெரிவிக்கும் நம்பிக்கையைப் பிரிவினைப் பிரச்சினை மீது நடைபெற்ற இறுதி வாக்கெடுப்பாகக் கருதி மாநிலத்தின்மீது தங்களுக்குள்ள பிடிப்பை என்றென்றைக்கும் விட்டுவிட மத்திய சர்க்கார் ஒப்பும் என்று மந்திரி உறுதி கூறுவாரா?"

பலே ! பலே ! இது அல்லவா துணிவு ! வீரம் ! அண்ணா ! நீ எப்போதும் அச்சம், தயக்கம் காட்டும் போக்குடன் இருப்பது வாடிக்கையல்லவோ ! என் போன்றாருக்குக் கசப்புக் கூட ஏற்படுவதுண்டே அந்தப் போக்கினால். நாடு விழிப்புற்று இருக்க, வீரர் குழாம் திரண்டு நிற்க, அவர்தம் விழிகள் வேல் போல் இருக்க, ஏன் இந்த அண்ணன் இன்னமும் கனிவு, தெளிவு என்ற போக்கையே மேற்-