5
தம்பி !
கூத்தாடிகள்
கூவிக்கிடப்போர்
அடுக்குமொழியினர்
ஆபாச நடையினர்
பணம் தேடிகள்
பதவிப்பித்தர்கள்
காமச்சுவைப் பேச்சினர்
கதை எழுதிப் பிழைப்போர்
அன்னக்காவடிகள்
ஆடி அலைபவர்கள்.
இவை, 'குரு' எனக்காகக் தேர்ந்தெடுத்து ஏவிய கணைகள்—அவரைவிட்டு நான் தனியாகக் கிளம்ப நேரிட்டபோது.
காங்கிரஸ் வட்டாரத்துக்குச் சொல்லொணாத குதூகலம்.
வேண்டும் பயலுக்கு! இதுவும் வேண்டும், இதற்கு மேலும் வேண்டும்! பெரியாருடன் கூடிக்கொண்டு, 'பொடியன்' காங்கிரஸ் மகாசபையையே அல்லவா கண்டித்தான்.
படித்தவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சி—அரசியல் அறியாத அப்பாவிகளும், கிழக்குமேற்குத் தெரியாத ஏமாளிகளும்தான் வேறு வேறு கட்சிகளில், என்று நாம் கூறிக்கொண்டிருந்தோம்—எக்களித்துக் கிடந்தோம்; பல் போனதுகள்—பட்டம் இழந்ததுகள்—சரிகைக்குல்லாய்கள்—சலாமிட்டு வாழ்ந்ததுகள்—ஆகிய வகையினர் மட்டுமே காங்கிரசை எதிர்ப்பர்—இளைஞர்கள்—இளித்துக்