52
றல்லவா, கூறிப் போற்றுகின்றனர், இன்றைய அவருடைய போக்கை.
தம்பி ! அமைச்சர் வெங்கட்ராமனே, பார்க்கிறார், என்று வைத்துக்கொள், தோழர் சம்பத் அவர்களை, கண்களிலே ஒரு குறும்புப்பார்வை ! உதட்டிலே ஒரு கேலிச்சிரிப்பு ! உள்ளம் என்னென்ன எண்ணும் !!
'மிஸ்டர் ! நம்மை ஒரு போடு போட்டுப் பயம் காட்டியே விட்டீர்களே, வா, பார்க்கலாம் தேர்தலில் என்று!!'—அமைச்சர் கூறுவார், இவர்...?
'எனக்குத் தெரியும் மிஸ்டர் ! நீங்களே, கட்டாயமாக மாறிவிடத்தான் போகிறீர்கள் என்பது.'—இதுவும் அமைச்சர், இவர்...?
பகற்கனவு என்று சரியான சூடு கொடுத்தீர்கள், மிஸ்டர் ! நீங்கள் சொல்லவே, சும்மா இருக்கிறார்கள், திகைத்துப்போய். நாங்கள் சொன்னபோது, அடே அப்பா ! எப்படி யெப்படிக் கண்டிப்பார்கள்— நீங்களும் தான் இலேசாகவா கண்டித்தீர்கள் !"—இதவும் அமைச்சர் ! இவர்...?
தம்பி ! சில மாதங்களுக்கு முன்பு, சென்னை சட்ட சபையில், அமைச்சர் வெங்கட்ராமன் இப்போது கொண்டுள்ளதாகக் கூறும் போக்குக்கு முற்றிலும் மாறான முறையில், டெல்லி பாராளுமன்றத்தில் அவர் உறுப்பினராக இருந்தபோது பேசியவைகளை நான் எடுத்துக் காட்டிப் பேசினேன். அமைச்சர் வெட்கம் கலந்த புன்னகையுடன் அமர்ந்திருந்தார். பிறகு தொழிலாளர் பிரச்சினையாக அவரைச் சென்று காணவேண்டி நேரிட்டது. என்னைப் பார்த்த உடனே அவர் கோபத்தோடு அல்ல, குழையக் குழையக் கேட்ட முதல் கேள்வி, 'சார்', எங்கே இருந்து நான் முன்பு பேசியதை யெல்லாம் தேடிப் பிடித்து எடுத்து வைத்துக் கொண்டீர்கள் ?' என்பதுதான் ! என் பாராளு-