58
நம்பிக்கையும் இரண்டே ஆண்டுகளில் உருக்கிப் போய்விடும், உருத்தெரியாமல் போய்விடும் என்று எந்தக் காங்கிரஸ்காரராவது கேலிக்காகச் சொல்லி இருந்தால் கோபம் கொப்பளிக்கும் நிலை பெற்று, "ஏடா ! மூடா ! இந்தப் பேச்சுக் கேட்ட பிறகுமா உனக்குக் கெடுமதி ? பேசினவரின் வார்த்தைகளில் வெளிப்பட்ட வீராவேசத்தைக் கவனித்தனையோ ? இவர் போன்றார், களத்திலே நிற்போர், கிலிகொண்டு கடுகி ஓடிவிடினும், தன்னந்த தனியாக நின்றேனும், இலட்சிய வெற்றிக்கு உழைக்கும் தன்மையினர் என்பதை உணருகிறாயா ? இப்படிப்பட்டவர்கள் ஊட்டும் எழுச்சியா உலர்ந்து போகும் ! என்னே உன் அறிவீனம்!"—என்று கடிந்துரைத்திடும் நிலையினராயினர்.
நல்ல புடம் போட்டெடுத்த அரிய வீரர்கள், கூர் ஏறிய ஒளிவிடும் சாதனங்கள், இரண்டே ஆண்டுகளிலா இடுப்பொடிந்தோர் ஆகிவிட்டனர் ! நம்ப முடியுமா ? ஆதாரம் காட்ட இயலுமா? கூர் மழுங்கியா விட்டது? ஒளி மங்கியா போய் விட்டது? பண்டித நேருவுக்குக் கருப்புக் கொடி காட்டிய நிகழ்ச்சியும், இந்தியை எதிர்க்கத் திரண்டு நின்ற எழுச்சியும், கூர் மழுங்கியதையா காட்டுகிறது !! பேதையும் கொள்ளனே அப்படி ஒரு எண்ணத்தை ? பின்னர் ஏன் புதுக்கட்சிதேடினோர். தி. மு. கழகம் பயனற்றுப் போய்விட்டது என்று கூறுகின்றனர் ? ஏன் ?
அதற்கென்ன செய்யலாம், மழை காலத்தில் காளான் முளைக்கிறது ! பார்த்துக் கொண்டிருக்கும் போதே பெரிதுமாகிறது ! ஆனால், நிலைத்து நிற்கமுடிகிறதோ ? அதுபோலத்தான் இந்தத் தி. மு. க.! திடீரென்று முளைத்திருக்கிறது—வெகு விரைவிலே, இருக்கும் இடம் தெரியாமல் அழிந்துவிடப் போகிறது—என்று மாற்றார்கள் பேசினர், மார் தட்டிக் கொண்டு பேசினார், இன்று தி. மு. கழகம்