59
உருப்படாது என்று பேசுபவர்; "தி. மு. கழகம் துவங்கிப் பத்து ஆண்டுகளாகி விட்டன ; துவங்கும்போது கழகத்திற்கு எந்த வசதியும் இல்லை ; இதன் ஆயுளைப்பற்றி ஆருடம் கணித்தவர்கள் பலர் உண்டு. அரசியலில் நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்திருக்கிறது காளான், நாளை அடிக்கும் காற்றில் மறைந்து விடும் என்றார்கள். அப்படிச் சொன்னவர்களைத்தான் இப்பொழுது காணமுடியவில்லை."
19—9—59-ல் பல்கலைக் கழக மாணவர்கள் உலவிடும் சிதம்பரத்தில், புதுக்கட்சிக்கு உடையார், பேசியது இது. இப்போது அவர், ஆருடம் கணிக்கிறார், தி. மு. கழகம் அழிந்து போகும், போய்விடும் என்று. அவர் பேசியது அவருக்கு நினைவிருக்குமானால், இன்று இப்படி ஆருடம் கணிப்பாரா ? அப்படிப்பட்ட ஆருடம் கணித்தவர்களை இவர் முன்பு எவ்வளவு கடுமையாகத் தாக்கி இருக்கிறார், தெரியுமா ? தம்பி !
துறையூரில் 1959, ஜூன் 20, 21-ல் நடைபெற்ற தி. மு. கழக மாநாட்டுக்கு வந்திருக்க வேண்டும், 'நமது அரசு' என்ற தலைப்பில், இன்று வடவரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கலாம்—வெட்டிக்கொண்டு போகும் உரிமையுடன் என்று பேசுபவர், ஆற்றிய பேருரை, கேட்க—அமைச்சர் பக்தவச்சலம் அகப்பட்டார் அன்று !
"தாசர் புத்தி தலைக்கேறிவிட்ட திருக்கூட்டத்தின் தனித் தலைவர் பக்தவத்சலமே !" இப்படி அழைத்து, அமைச்சர் பக்தவத்சலத்தின் அரசியல் அப்பாவித்தனத்தை எள்ளி நகையாடி, 'நமது அரசு' இருந்தால் என்னென்ன நடைபெற முடியும்; நலன்கள் கிடைக்கும் என்று விளக்கம் அளித்தார். இப்பொழுது அமைச்சர் பக்தவத்சலம், என்ன எண்ணிக்கொள்ளுவார் ? துள்ளுகிற மாடு பொதி சுமக்காது