உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

என்பார்கள் ! அதுபோல் அல்லவா ஆகிவிட்டது. அன்று நான், திராவிட அரசு என்பது வீண் பிரமை என்றேன். ஏ ! அப்பா ! என்னென்ன சுடு சொல் என்மீது வீசப்பட்டது. தாசர் புத்தி தலைக்கேறிவிட்டதாம், அதனால், திராவிட அரசு வேண்டாம் என்கிறேனாம் ! சொன்னார் ! இன்று அவரே சொல்கிறார், திராவிட நாடு ; கனவு என்று !! எப்படி அவர் போக்கு !!—என்று கூறி, கெக்கொலி செய்வாரே,

பக்தவத்சலம், தாசர் திருக்கூட்டத் தலைவர் ! ஒரு சமயம், நேரு பெருமகனாரிடம் மதிப்பு வைத்துப் பேசினாரோ என்று கேட்கத் தோன்றும. இல்லை, தம்பி ! இல்லை ! அவரை மட்டும் விடுவாரா ? கதருடை தரித்த சர்வாதிகாரி ! துறையூர் மாநாட்டிலே பேசியதுதான், இரண்டே ஆண்டுகளுக்கு முன்பு.

கதருடை தரித்த சர்வாதிகாரி இன்று இந்தியத் துணைக்கண்டத்தை ஆளுகிறார்.

சரி! ஆளட்டுமே, அதனால் என்ன ? அவருடைய ஆட்சி தான். அசைக்க முடியாததாக, ஈடு எதிர்ப்பு அற்ற வலிவுடன் இருக்கிறதே !—என்று காங்கிரசார் எக்காளமிடுவர். அதற்கு இடமளிப்பாரா ? இதோ அவர்களுக்கு அடி வயிற்றில் கலக்கம் ஏற்படும்படியான பேச்சு; "இந்தியப் பேரரசு இன்னும் நீண்ட காலத்துக்கு நீடிக்கும் என்று சொல்வதற்கில்லை. ஒரு அரசாங்கம் அழிவதற்கு மூல காரணம், நிர்வாகத்திலே ஊழல்கள் மலிவதுதான், இன்றைக்கு இந்தியப் பேரரசின் நிர்வாகத்தில் ஊழல்கள் மறைக்க முடியாத அளவுக்கு வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன. முந்திரா, டால்மியா போன்ற வடநாட்டுப் பெரு முதலாளிகள் கையிலே பேரரசு சிக்கி, மீளமுடியாத ஊழலிலே அகப்பட்டுக் கொண்டது. அந்த ஊழல் நிர்வாகம் நீடிக்காது என்பது உறுதி !" உறுதி ! உறுதி ! உறுதி ! உரையில் ! இப்-