61
போது ? கதருடை அணிந்த சர்வாதிகாரியினால் நடத்தப்பட்டு வருவதும், விரைவிலே அழியப் போவதுமான இந்தியப் பேரரசிலே இணைந்துதான், தமிழ் நாடு இருக்கும்—ஆனால் ஒரு சலுகை ! இஷ்டப்பட்டால், பிரிந்து போகலாம் !! அப்படி ஒரு உரிமை !!
ஆதித்தனார் அதனால்தான் கேட்கிறார், தமிழ் நாடு என்கிற வரையில், மெத்த சந்தோஷம் ; வரவேற்கிறேன் ; ஆனால், அது இந்தியப் பேரரசுடன் இணைந்து இருக்கும் என்றால் நான் ஒப்புக்கொள்ளமுடியாது, 'நாம்—தமிழர்' இயக்கம் இலட்சியத்தை இழந்துவிடச் சம்மதிக்காது என்கிறார். நம்மை ஆகரிக்கத்தானே வேண்டும் என்று எண்ணிக்கொள்ளக்கூடுமே, புதுக்கட்சி என்று, ஆதித்தனார் தெளிவாக, திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார்—இந்தியப் பேரரசுடன் இணைந்த தமிழ் நாடு உமது கொள்கையானால், நாம் ஏற்கோம் ; நமக்கென்று இலட்சியம் இருக்கிறது ; அதனை இழப்போமா எல்லோரும் என்கிறார். யாரைப் பார்த்து ? இலட்சிய முழக்கம் செய்து வந்தவரைப் பார்த்து !!—தெளிவு—உணர்ச்சி—எழுச்சி ததும்பும் பேச்சல்லவா !!
தம்பி ! அதற்கும் அதே துறையூரில், விளக்கம் தந்தார். ஒன்றைக்கூட பாக்கியாக விடவில்லை, ஒரு வேளை, சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லியாகிவிட்டது—மேலும் பேசினால் சொன்னதையேதான் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டும் ; சலிப்பாக இருக்கும் ; ஆகவே, முற்றிலும் புதிய பாணியில் பேசியாக வேண்டும் ; நாம் பேசியதற்கு நாமே மறுப்புரைப்போம், என்ன சொல்கிறார்கள் பார்க்கலாம் மற்றவர்கள்—என்ற சோதனையோ, இந்தப் புதிய முயற்சி என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.
வடநாட்டு முதலாளிகளுக்கு இந்தியப் பேரரசின்மீது உள்ள பிடிப்புக் குறையவில்லை; மாறாக நாளுக்கு நாள் வலு-