உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

செய்யுங்கள்" என்று முடித்தால், கேட்போர் என்ன சொல்வர்? இதைத்தானா இத்துணை வீராவேசமாகப் பேசினாய் ! கத்தரிச் செடி நடவு வேலைக்காகவா இத்தனை கொக்கரிப்பு என்றெல்லவா கேலி பேசுவர்.

எடுத்துக்கொள்ளும் பொருள் நம் இதயத்தைத் தொடும் அளவுக்கு இருக்குமானால், அந்தக் கொள்கையிலே நமக்கு நீங்காப் பற்று இருந்தால் மட்டுமே, பேச்சு, சுவையும் பயனும், எழுச்சியும் எழிலும் கொண்டதாக அமையும். இதனை மற்றவர்க்குப் புதுக்கட்சியார் அறிவித்திருக்கிறார்.

"நாம் விடுபட வேண்டும் என்ற எண்ணம், நம் இதயத்தில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

"நம்முடைய இலட்சியத்தை யார் ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் பேச்சிலே தெளிவு இருக்கும்—உணர்ச்சி இருக்கும்—எழுச்சி இருக்கும். இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் ஏதேதோ காரணங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். " இவ்வளவு தெளிவாக பேச்சுக்கும், பொருளுக்கும் உள்ள தொடர்பை விளக்கி விட்டுச், சமதர்மம் வேண்டாம்—கூட்டாட்சி வேண்டாம்—பிரியக்கூட வேண்டாம்—ஒட்டிக் கொண்டு இருப்போம், வெட்டிக் கொள்ளும் உரிமையை வாங்கிக் கொண்டு—எனும் பொருளைத் தமக்கு உரியது ஆக்கிக் கொண்டு, ஊராரையும் அழைக்கிறார். இதற்கு ஒரு தனிக்கட்சியாம் ! ஆதித்தனார் ஆற்றல் மிக்கவர் என்றல்லவா எவரும் கூறுவர், தமிழகம் இந்தியக் குடிஅரசிலிருந்து தனியாக வேண்டும்—அம்மட்டோ? கடல் கடந்து வாழும் தமிழர்கள், இருந்து வரும் இடங்கள், தமிழ் இராஜியத்தில் உறுப்புகளாக வேண்டும்—பரந்த தமிழகம் வேண்டும்—இந்தியாவுடன் ஒட்டிக் கொண்ட நிலையில் அல்ல, தனி அரசு எனும் நிலையில் என்று, அவருடைய கரத்தையாவது வலுவாக்கி இருக்கலாம்—அந்த