உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

இலட்சியத்துக்காவது பாடுபடலாம். இதிலே கொஞ்சம், அதிலே கொஞ்சம் எல்லாம் இருக்குது, இல்லை பஞ்சம் என்று ஒரு பண்ணா ?

எவ்வளவு கெட்டு விட்டது என்று, தி. மு. கழகத்தைக் குறித்து, விலகினோர் கூறிடினும், இந்தப் புதிய கட்சியின் கதம்பக் கொள்கையைவிட ஆயிரம் மடங்கு மேல் என்று மிக மிகச் சாமான்யர்களும் அறிவார்களே, கழகத்தின் மீது ஏன் இத்துணை கடுப்பு ?

"விடுதலைப் போராட்டத்தில் வேலி யோரத்தில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தவர்களும், காட்டிக் கொடுத்தவர்களும், தங்கள் கைவரிசையைக் காட்டினால், ஐயோ என்று அலறி ஓடிவிடுவோம் என்று நினைத்தார்கள். ஆனால், நாமே கண்டு மயங்கும் அளவுக்கு நம் கழகம் வளர்ந்து வருகிறது" இந்த நிலையிலிருந்து, கழகம் எந்த முறையில், இப்போது கெட்டு விட்டது என்பதை எடுத்துக் காட்டினார்களா? காலமெல்லாம், தனிநாடு, தனிநாடு என்று பேசிப் பேசிக் குடும்பத்தைக்கூட மறந்துவிட்டுக் கொள்கை வீரர்கள் அணி அணியாகக் கிளம்பிக் குருதி கொட்டிய பிறகு, திடீரென்று ஓர் நாள் அவர்களைப் பார்த்து, "வீரர்காள் ! பின்பு பொறுத்திடுவீர் ! வீண் வேலையில் உம்மை ஈடுபடுத்திவிட்டேன். திராவிடநாடு என்பது கற்பனை, அது வேண்டாம் நமக்கு" என்றா கூறுவது? எதேச்சாதிகாரிகள் கூட, இப்படிக் கூறத் துணிவதில்லையே. கூடிப் பணியாற்றிடுவோரைக் கூட்டி வைத்துக் கொள்கைபற்றி ஏற்பட்டுவிட்ட கருத்து வேற்றுமை பற்றிப் பேசிட வேண்டாமா ? ஆண்டவன் அடி எடுத்துக் கொடுக்க, அடியார் பாடிடும் அருள் தரும் பாசுரம் போலவா. தலைவர், எப்போதும், என்ன சொல்வார் ; அதை அப்போது நமக்கு உகந்தகொள்கை யெனக் கொள்வோம் என்று மக்கள் ஏற்க