உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

மிகக் கடுமையான சொல்லே, அவர்களை, 'பாரத புத்திரர்கள்' என்று சொல்வதாகும். சின்னாட்களுக்கு முன்பு கூடச் சென்னை மாநகராட்சி மன்றத்திலே 'பாரத புத்திரர்கள்' என்று பேசியதை ஏசல் எனக் கொண்டு சிலர் கோபித்துக் கொண்ட செய்தி பத்திரிகைகளில் வந்தது ; கண்டிருப்பாய். அகில இந்தியா பேசுபவர்களை, நாம் கண்டிக்க முற்படும்போது கூட, அவர்கள் மனம் புண்படக்கூடாது, நமது நாக்கும் நரம்பற்றது என்று பலரும் நினைத்து விடும்படி பேசிவிடலாகாது என்ற முறையில், பேசி வந்தோம்—பாரத புத்திரர்கள் என்று.

துரோகிகள், கங்காணிகள், என்று கூறி யிருக்கிறோமா, அகில இந்தியா பேசுபவர்களை? நான் கூறினதில்லை. ஆனால், தோழர் சம்பத்து ? அதையுந்தான் கேளேன் ! இன்று, அவருடைய அறிவாற்றலைப் பத்தி பத்தியாக வெளியிடும், அகில இந்தியாக்களும் கேட்கட்டும் !

"தென்னகத்தில் இருந்துகொண்டு அகில இந்திய அரசியல் பேசினால்—பாரதப் பண்பாடு பற்றிப் பேசினால்—அவர்கள், பிறந்த மண்ணுக்குத் துரோகம் செய்கிறார்கள், என்பதுதான் பொருள். அவர்கள் எங்கேயோ இருக்கிறவர்களுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் கங்காணிகளாகத் தானிருக்க முடியும். இது குறுகிய புத்தியால் சொல்வதல்ல,—பிறந்த நாட்டுக்குப் பெருமை தேடித்தரும் பரந்த எண்ணம். தத்துவ ரீதியில், வடக்காவது தெற்காவது என்று பேசினால், அவர்கள் அறியாமையில் மூழ்கியிருக்கிறார்கள்.—அல்லது துரோகமிழைக்கிறார்கள் என்பதுதான் பொருள் !"

இந்த விளக்கத்தின்படி, துரோகிப் பட்டியலில், கங்காணிப் பட்டியலில், எவரெவர் என்று தம்பி, எண்ணிப்பாரேன் ! காமராசரும், கனம் சுப்பிரமணியமும், கங்காணி-