68
கள் ! நவ இந்தியாவும் அகில இந்தியாவை ஆதரிக்கும் ஏடுகளும் கங்காணிகள் ! எவரெவர், இங்கு இருந்துகொண்டு, அகில இந்தியா பேசுகிறார்களோ, அவர்கள் துரோகிகள்—கங்காணிகள், நீயும் நானும் இல்லை அந்தப் பட்டியலில், பெரியார் இராமசாமி இல்லை, அந்தப் பட்டியலில், ஆதித்தனார் இல்லை அந்தப் பட்டியலில் !
ஆனால், வெட்டிக் கொண்டு செல்லும் உரிமையைப் பெற்றுக் கொண்டு, அகில இந்தியாவுடன் ஒட்டிக்கொண்டு இருக்கும் கொள்கையினர்? எனக்குக் கூச்சமாக இருக்கிறது தம்பி! சொல்ல !
ஆனால், காரணம் காட்டாமல் கண்மூடித்தனமான, கற்பனையாக, வடக்கு—தெற்கு என்று, அவர் பேசிக்கொண்டிருந்தாரா? இல்லை ! அழகழகான ஆதாரங்களுடன் ! இன்று அவருக்கு அவை பிடிக்கவில்லையாம் ! ஆனால், படித்துப் பார்க்கச் சொல், எவரையும், பல நாட்கள் ஏடுகளில் உள்ளது பற்றிச் சிந்தித்துச் சிந்தித்துத், தெளிவு பெற்றுத் துணிவு பெற்றுப் பேசியிருக்கிறார் என்பது தெரியும். அவசரக் கோலத்தை அள்ளித் தெளித்ததுபோல் அல்ல.
"தென்னகத்துக்கென ஓர் தனிப் பண்பாடு இன்னும் இருந்து வருகிறது. இந்தத் தனிப் பண்பை எல்லாத்துறைகளிலும் காணமுடிகிறது. கோயில் சிற்பங்களை எடுத்துக் கொண்டால், தமிழ் நாட்டிலுள்ள அதே சிற்பக் கோயில் அமைப்பு முறையை ஆந்திரத்திலும் காணலாம்—கருநாடகத்திலும் காணலாம்—கேரளத்திலும் காணலாம்; இந்த நான்கு மாநிலங்களிலும் ஒரே வகையான கட்டிட அமைப்பினைக் காணலாம். இதற்கு, 'திராவிடக் கட்டிடக்கலை' என்று இன்றும் வழங்கி வருகிறது."
"இன்று தமிழகத்தில் வளர்த்துள்ளது போல் ஆந்திரத்தில் தி. மு. கிளைகள் இல்லாமல் இருக்கலாம்; ஆனால், இந்த