உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

நான்கு மாநிலங்களிலும் கலையில்—பண்பாட்டில் ஒருமைப் பாட்டினைக் காணலாம்."

"இசைத் துறையை எடுத்துக்கொண்டாலும், 'வடநாட்டு இசை—தென்னாட்டு இசை' என இரண்டு வகையாகப் பிரிந்து கிடக்கிறது."

"தென்னாட்டு இசையான கர்நாடக இசையில் புகழ் படைத்த சித்தூராரானாலும், செம்பையானாலும், தென்னக மாநிலங்கள் நான்கில் எதில் வேண்டுமானாலும் பாடலாம்—இந்த நான்கு மொழிகளுக்கிடையே இசையில் ஒரு ஒற்றுமை நிலவுகிறது."

"இந்தி பேசினால் அதை வங்காளி புரிந்துகொள்ளமுடியும்; ஆனால் ஒரு தென்னாட்டுக்காரன் அதைப் புரிந்து கொள்ளமுடியாது. இதற்குக் காரணம், இந்தி சமஸ்கிருகத்திலிருந்து பிறந்தது, மற்ற வடநாட்டு மொழிகள் அனைத்துக்கும் சமஸ்கிருதம்தான் அடிப்படை."

"தென்னாட்டு மொழிகள் வடநாட்டு மொழியினின்றும் முற்றிலும் வேறுபட்டவையாகும். வடநாட்டிலுள்ள எந்த மாநிலத்திலும் இந்தியில் பேசினால் அங்குள்ளவர்கள் புரிந்துகொள்ளுகிறார்கள்; ஆனால் வடநாட்டவர் தென்னாட்டில் வந்து இந்தியில் பேசினால் அதில் ஒரு அட்சரம்கூடத் தென் நாட்டினரால் புரிந்து கொள்ளமுடியவில்லை, என்று காந்தி, நேரு போன்ற தலைவர்களெல்லாம் சொல்லியிருக்கிறார்கள்."

"தென்னாட்டு மொழிகளுக்குள் சிறு சிறு உருமாற்றம் இருக்கலாமே தவிர, வடநாட்டுத் தொடர்பு சிறிதும் அவற்றிற்குக் கிடையாது. தமிழிலே பேசினால் ஆந்திரரும், கர்நாடகரும், மலையாளியும் புரிந்துகொள்ளமுடியும். இதிலிருந்து, தென்னாட்டுக் கலை, மொழி, பண்பாடு அனைத்தும்

கொ—5