72
பாசங்கள்—முரண்பாடுகள்—ஏராளமான பேதா பேதங்கள் அரசியலில் இருப்பதை இன்னும் நாம் உணராவிட்டால், நாம் உணர்ந்ததை மற்ற மூன்று திராவிட மாநிலங்களுக்கும் உணர்த்தாவிட்டால், 'தமிழ் நாட்டில்தான் இந்தக் கூச்சல் இருக்கிறது' என்று வடநாட்டினர் சொல்லும் நிலைமை ஏற்படக்கூடும்."
"'தென்னக அரசியல்', ஏதோ தி. மு. க. வாழ்வுக்காகப் புதிதாக அமைத்துக்கொண்ட மேடை என்று கருதுவதற்கில்லை."
"டாக்டர் பி. சுப்பராயன் அவர்கள் எதிர்பாராவிதத்தில் மந்திரி சபையில் இடம் பெற்றதைக்கண்டு அவருக்கு ஓர் பாராட்டு அளிக்கப்பட்டதும் அந்தப் பாராட்டு விழாவில் கூட வடநாட்டுக்காரர்கள் பேசும் போதெல்லாம், 'டாக்டர் சுப்பராயனுக்கு மந்திரிப் பதவி கிடைத்ததன் விளைவாகத் தென்னகத்திற்குத் திருப்தி ஏற்படலாம்' என்றுதான் குறிப்பிட்டார்கள். மற்ற வடநாட்டு மாநிலக்தைச் சேர்ந்த எவரேனும் மந்திரி பதவி பெற்றால் அவர் இன்ன மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று அவரவர் மாநிலத்தின் பெயரைக் கூறித்தான் பாராட்டுவார்கள். ஆனால், டாக்டர் சுப்பராயனைப் பாராட்டும்போது, அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதாகப் பாராட்டவில்லை, 'தென்னாட்டுக்காரர்' என்ற முறையிலே பாராட்டினார்கள்."
"மக்கள் சபையில், என்னுடனிருக்கின்ற கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர் நாகி ரெட்டி, இந்திப் பிரச்சினை பற்றித் தென்னாட்டு உணர்ச்சி பீறிட்டு வரும் அளவுக்கும் பேசினார். மற்றக் கம்யூனிஸ்டுகளுக்கு அந்த உணர்ச்சி இல்லை."
"தென்கை அரசியலை மனத்தில் வைத்துக்கொண்டு எவர் எந்தக் கட்சியிலிருந்து பேசினாலும் அவர்களை நான் பாராட்டுவேன்."