74
களைத் தோழர் சம்பத், என்ன கூறி அழைத்திருக்கிறார் தெரியுமா, தம்பி. நம்மை விட்டு விலகியதும் அப்பாவி என்கிறார்கள், ஆபாச நடையுடையோன் என்கிறார்கள்—அது கேட்டு, நீ ஆயாசமடைகிறாய். காமராசர் போன்றோரும், அவர் கட்சி ஏடுகளும், பூரித்துப் போகின்றன. ஆனால் அந்த அகில இந்தியாக்களை அவர் என்ன பெயரிட்டு அழைத்திருக்கிறார், தெரியுமா? அகப்பட்டதைச் சுருட்டுபவன்! ஆமாம், தம்பி! அது ஆனானப்பட்ட காமராசராகட்டும், அகிலம் சுற்ற ஆரம்பித்திருக்கும் கனம் சுப்பிரமணியமாகட்டும். இதுதான் தோழர் சம்பத் அவர்கள் தரும் சிறப்புப் பட்டம்!
இப்போது, அப்போது அப்படி எல்லாம் பேசியது 'பாதகம்'—பொறுத்தருள்வீர் என்றுகூடப் பேசக்கூடும். ஆனால், அதைக் கேட்பவர்கள் இப்போது பேசுவதற்கு மீண்டும் எப்பொழுது, பொறுத்திடுக ! கூறுவாரோ, என்று தான் வியந்து பேசுவர். பன்னிரண்டு ஆண்டுகளாகப் பேசிக் கொண்டு வந்தது பாதகம் என்று இன்று அவருக்குப் புரிகிறது போலும்! இப்போது பேசுவதும், அதே ரகமாக இருக்காது என்பதற்கு என்ன உறுதி, இருக்க முடியும் ? இப்போது பேசுவதை எப்போது மறுப்பாரோ, யாரறிவார்? இவர் எதைப் பேசினாலும், அது எப்போதேனும் இவராலேயே மறுக்கப் பட்டுவிடக்கூடுமே என்ற பயத்தோடு அல்லவா இருந்து தொலைக்க வேண்டும். அப்படிப்பட்ட பேச்சை எப்படி நம்பிக் கொண்டிருப்பது? இப்போது, எப்படி, திராவிடநாடு கனவு என்று பேசுகிறாரோ, அதுபோல, இப்போது பேசும் 'தேசீயம்' ஒரு பித்தலாட்டம் என்பதை உணர்ந்து கொண்டேன்! இது வரையில் உங்களைத் தவறான வழியில் அழைத்துச் சென்றதற்காக மன்னித்திடுக! என்று கூறுவாரோ? நாம், இவர் பேச்சை, நம்பிக்கையுடன் கேட்பதே