உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

ஆபத்து—என்றல்லவா மக்கள் கருதுவர்—திகில் ஏற்படும் !

தம்பி ! இவர் அகில இந்தியா பேசுவோரிடம் உள்ள திகிலைப் பற்றியும் பேசுகிறார்.

"தெற்காவது வடக்காவது, எல்லாம் ஒன்று என்று பேசுபவன், அகப்பட்டதைச் சுருட்டுபவனே தவிர, அரசியல் தீர்க்கதரிசி அல்ல."

"சர்க்கஸ் கம்பெனியில் கம்பத்தின் உச்சியில் ஏறிவித்தைகள் செய்பவன், எந்த நிமிடத்தில் கீழே விழுவோமோ என்று அஞ்சிக் கொண்டே இருப்பது போல அகில இந்தியா என்று உதட்டளவில் பேசிக் கொண்டிருந்தாலும், அத்தனை பேர் மனதிலும் ஒரு திகில்—எந்த நேரத்தில் எந்தப் பிரச்னையில் இந்தியா உடையுமோ என்ற திகில் இருந்து கொண்டே இருக்கிறது."

தம்பி ! இவை பூவிருந்தவல்லியில் 1959, செப்டம்பர் 11,12 நாட்களில் மாநாட்டிலே பேசப்பட்ட மணி மொழிகள் ! இப்போது இவை யாவும் குப்பை, கூளம் என்று தள்ளிவிடச் சொல்கிறார் !

அந்த மாநாட்டிலேதான், இங்கு என்னை ஏசும் அதே விறுவிறுப்புடன், அமைச்சர்களுக்கு அர்ச்சனை நடந்தது.

"இங்குள்ள பக்தவத்சலமும் சுப்பிரமணியமும் டெல்லியிலே வந்து கர்ணம் போடுகிறார்கள்."

"சில இளிச்சவாயர்கள் கையில் 8 கோடி பேர்கள் திராவிடர்கள், மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சிலர் டெல்லியிலிருந்து கட்டியாளுகிறார்கள். அவர்களிடமிருந்து நாம் விடுபட்டாக வேண்டும்." இவ்வளவு திட்டவட்டமாகப் பேசினார்—பேசினால் என்ன? இப்போது, லேபில் மாற்றிக் கொண்டார், அது அவருடைய விருப்பம்