உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

என்று அவரைப் பூஜைக்குரியவராக—பொன்னான தலைவராகக் கொண்டு விட்டவர்கள் கூறிடக் கூடும். ஆனால், அதற்கும் அவர் இடம் வைக்கவில்லை.

"எவர் எவர் லேபில் எப்படி யெப்படி மாறினாலும், தென்னக உணர்ச்சி மட்டும் மறைந்து விடப் போவதில்லை." தம்பி ! அன்று அவருக்கு இருந்த அந்த நம்பிக்கை எனக்கும் உனக்கும், நம் போன்ற இலட்சக் கணக்கானவர்களுக்கும் இன்றும் இருக்கிறது. இதற்காக, நம்மை அப்பாவிகள் என்று ஏசட்டும்—ஆபாச நடையினர் என்று தூற்றட்டும்—கவலை இல்லை—தடித்த வார்த்தைகளை உபயோகிப்பது அவருடைய வாடிக்கை—கைவசமுள்ள சரக்கு என்பதுதான் நமக்குத் தெரிகிறதே. முன்பு ஒரு சாரர்மீது கோபித்துக் கொண்டார்—அப்போது,

துரோகிகள், கங்காணிகள் இளிச்சவாயர், தாசர் புத்தியினர், கர்ணம் அடிப்போர், அகப்பட்டதைச் சுருட்டுவோர்—என்று ஏசினார். இப்பேது நம்மீது கோபம், நாலுவார்த்தை பேசுகிறார், எப்படிச் சும்மா இருக்க முடியம்? சுறுசுறுப்பான சுபாவம், விறுவிறுப்பூட்டும் வயது!!

"இந்த நான்கு மாநிலங்களின் நாகரிகமும் தொன்மையான திராவிட நாகரிகமாகும்; அதனுடைய பளபளப்பு இடையிலே கொஞ்சம் மங்கி யிருக்கலாம்; இருந்தாலும் திராவிட நாகரிகத்தின் கருப்பொருள் இன்றும் தங்கியிருக்கிறது."

"தென்னகத்தின் தனிச் சிறப்பு வாய்ந்த திராவிட நாகரிகத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறோம் நாம். உதய சூரியன் போல் நமது இலட்சியம் எல்லோருடைய கண்களுக்கும் தெரியத்தான் போகிறது. இரவிலே மலையுச்சியைப் பார்த்தால் இருட்டாக இருக்கிறது. இயற்கை விதிப்படி சிலமணி நேரத்தில் உதய சூரியன் வரும். உதய