உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

113

குடுத்தாங்க. எப்படி வேப்பம் புண்ணாக்கு உரமா போடுவது... கடலப் பயிருக்கு எப்படி செய் நேர்த்தி பண்ணுவது, புழுதி உழவு பண்ணுறப்பவே பூச்சி பாத்து அழிப்பதுன்னெல்லாம் சொல்லிக் குடுத்தாங்க. எனக்கு இதெல்லாம் ஒண்ணுமே தெரியாதுங்க... எல்லாம் கத்திட்டு வந்த பெறகு பூமிய வச்சிட்டு நா ஏ சோத்துக்குத் திண்டாடணும்னு தோணிச்சி.

‘நாத்தனா வூடு பட்டாபிராம் பக்கத்துல... புருசன் செத்திட்டாரு. ஒரு மக கலியாணம் கட்டிருக்கு, ஒரு பய்யன் பி.ஏ. படிச்சிட்டு கழனி வேல செய்யிறா. இன்னொருத்தன் ப்ளஸ் டு படிக்கிறான்னாங்க."

“என்னப் பார்த்ததும் அவங்களே, மக ‘தான்வா' பயிற்சிக்குப் போய் வந்து கடல போட்டு நல்ல விளைச்சல் எடுத்ததைச் சொன்னாங்க. அவங்க பையன் கருவமே இல்ல. விவசாயப் படிப்புப் படிக்கப் போறேன்னிச்சி. கூட்டியாந்தேன். பூமியப் பார்த்தோம். மண் பரிசோதனை முடிச்சி பத்து வண்டி ஏரி வண்டல் அடிச்சோம். ஆதிச்சப்புரம் கூட்டுறவு வேளாண் வங்கிக்குக் கூட்டிப் போச்சி. அவங்க ரொம்ப உதவி செஞ்சாங்க. நா நெல்லுப் போடலான்னு பார்த்தேன். அந்தப் புள்ள, நெல்லுக்குத் தண்ணி சவுரியம் இல்ல. மானாவாரி கடல பயிர் பண்ணலாம்னிச்சி."

"ஜி.ஆர்.ஐ. கடலை வித்து வாங்கி வந்தம். திரம் மருந்து கலந்து பாலதின் பையில் போட்டுக் குறுக்கி வச்சிட்டம். நெல்லு போல இதுல தண்ணி வுடக்கூடாது. பூமில ஈரம் பக்குவமா இருக்கணும். உழவோட்டிட்டே வாரப்ப ஒண்ணொன்னா விதைக்கணும். பிறகு எம்.என். மிக்ஸ்கர் ஒரு கிலோவை ஒரு சட்டி மணலில் கலந்து தூவினோம். ஒரு செடிக்கும் இன்னொரு செடிக்கும் நடுவுல ஒரு சாண் வுடணும். அப்பப்ப மழை பெஞ்சிச்சி. ஈரம் காயாம இருந்திச்சி. பதினைஞ்சு நா கழிச்சி களையெடுத்தோம். அப்பல்லாம் அது படிக்கப் போயிட்டது. எனக்குத் தயிரியம் வந்திட்டது. ஆள வச்சிட்டுக் களையெடுத்தேன். நாப்பத்தஞ்சி நாள் ஆனதும் ஜிப்சம் ஒரு இருபது கிலோ வாங்கி, ஒவ்வொரு செடிக்கும் மண்போட்டு அணைச்சி விட்டோம். நூறு நாள்ள