பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

159

கிளாசில் எம். ஏ. படிச்சா. அதுக்கு மேல வாத்தியார் படிப்பு, இங்க உள்ளுர்ல ஒரு எடத்திலும் வேலை கிடைக்கலன்னா, இவ காலேஜிலேயே கொக்கி போட்டுட்டா... என்னத்த சொல்லிக்கிறது!”

“ஒரு வேள அதுக்கெல்லாம் பரிகாரமா நம்ம தங்கச்சி புள்ளையப் படிக்க வச்சி முன்னுக்குக் கொண்டு வரலாம்னு இருக்கும்பா... சரவணனை நா வுட மாட்டே... அவம் படிச்சாலும் நம்ம பூமிய வுட்டுப் போகக் கூடாது. இது பொம்புளப்புள்ள. எப்படியோ அவம் மூலமாகவேப் படிச்சி, அவம் மூலமாகவே மாப்பிள்ளையும் கட்டினா, சரித்தான். .” செவந்தி ஏதோ ஒர் ஆறுதலுக்காகச் சொல்லிக் கொள்கிறாள்.

அந்த நிலப்பரப்பு முழுவதும் யூரியா வேப்பம் பிண்னாக்குக் கலவையுடன் பொட்டாஷ் கலந்து விசிறுகிறார்கள். கன்னியப்பன் அடுத்து வயலில் இருக்கிறான்.

ஒரு புல்லைப் பல்லில் கடித்துக் கொண்டு மஞ்சள்துண்டு முண்டாசுடன் உல்லாசமாகக் களைக் கொட்டினால் சீர் செய்து கொண்டிருக்கிறான்.

“யக்கோ, மாமா வந்திருக்காரா? அதா நா வரல. மாமாவுக்கு வாலிபம் திரும்பிடிச்சி!” என்று சம்பந்தமில்லாமல் ஏதோ பேசுகிறான். லட்சுமி கீரை பிடிங்கிக் கொண்டிருக்கிறாள். ஆராக்கீரை. கிணற்றில் நீர் இறைத்துக் கைகளையும் கழுவிக் கொள்கிறாள் செவந்தி.

“யக்கோ” என்று லட்சுமி கூப்பிட்டுக் கொண்டு வருகிறாள்.

“கீரை சமைக்கிறீங்களா? நல்லா பச்சுன்னு இருக்கு...”

‘குடு.”

“எதுல வாங்குறீங்க. அந்த பாண்டு சட்டில போடட்டுமா?”

“வாணாம். இப்படிச் சீலையிலே போடு. அது தார் நாத்தம் அடிக்கும். ...” சேலை முந்தியை நீட்டி விரிக்கிறாள். அவள் கீரையை எடுத்துப் போடும்போதுதான் கையைப்