உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

கோடுகளும் கோலங்களும்

பார்க்கிறாள். வலது உட்கையிலும் இடது உட்கையிலும் பச்சை குத்தியிருக்கிறாள். கோலம் போல் நீண்ட கொடி இடது கையில்... வலது கையில் ஏதோ பெயர் குத்தியிருக்கிறாள். காலம் சென்ற புருசனின் பெயரோ?

“பச்சப் பருப்புப் போட்டுக் கடஞ்சா பஷ்டாருக்கும்...”

“அப்பா... இல்ல எனக்கு அப்பான்னே வருது. மாமா இல்லையா?”

“மாமா பங்களுருக்குப் போயிருக்காங்க. அங்க மக இருக்குல்ல இங்கதா வெயில் அடிக்குதே! ஒரு அஞ்சாறு நாள் இருந்திட்டு வருவாங்க...”

“சொந்த வூடு இருக்குதா?”

“இருக்கு. ஆனா ரொம்பத் தள்ளி, ஓசூர் ரோடுல.”

“நீங்க போவீங்களா?”

“அதாம் பயிருப் போட்டிருக்கே. இதுதா நல்லாருக்கு. அங்க போனா பொழுது போவாது. அக்கா டீச்சரா இருக்கு. வேலய்க்குப் போயிடும். மாமா கடை வச்சிருக்காங்க. ரெண்டு புள்ளங்க இருக்கு... ஆச்சி, முப்பத்தஞ்சா நா ஊரியா வைக்கணுமால்ல. இவக தா பாத்துக்கறாங்க...” என்று கன்னியப்பனைச் சொல்லும் போது நாணம் முகத்தில் மின்னி மறைகிறது.


18


சித்திரைக் கத்திரி சுட்டெரிக்கிறது. சரோ ஊரில் சென்று ஒரே ஒரு கடிதம் சுருக்கமாகத் தான் வந்து சேர்ந்ததாக எழுதினாள். சரவணனுக்குப் பள்ளிக் கூடம் அடைத்தாயிற்று. நானும் மதுரைக்குப் போவேன். மாமா வீட்டுக்கு என்று குதிக்கிறான். “நம் கொல்லையில் கடலை புடுங்கப் போறம், அங்க என்னடா இருக்கு? புரட்டாசி லீவுல அப்பாவக் கூட்டிட்டுப் போய் காட்டச் சொல்ற, உனக்குத்தா இனி அந்த