பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/173

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

171

“ஏம்மா ஏனழுவுற என்ன ஆச்சி?”

“நீ நினைச்சாப்பலதாம்மா, அவங்க மோசமானவங்க. மாமாக்கு உணுமையில நம்ம மேல பாசம் இல்ல. மாமி அவுங்க வீட்டுக்காரங்க வச்சதுதா சட்டம். அவங்க தங்கச்சி பசங்க கூடப் போனனா, அவங்க கூட நானும் திரும்பிடுவேன்னு நினைச்சிருந்தாப்பல. அவங்க ஒரு வாரந்தா இருந்தாங்க. அவங்க புருசன் பெண்சாதி ரெண்டு புள்ளங்கள ஆட்டோ வச்சிட்டு ஊரெல்லாம் பாத்தாங்க. என்ன அவங்ககூட அனுப்பவே இல்லை. மாமா ட்யூட்டோரியல் நடத்துறாப்பல. அவங்க வீட்டு மாடில. அது கீழ ஒரு டாக்டரு கிளினிக்குக்கு வாடகைக்கு விட்டிருக்காங்க. மேல அவங்க பெட்ரூம் இருக்காப்பல. சேந்தாப்பல ஒரு போர்ஷன்ல, மாமியோட அம்மா. ஒரு லூசு தம்பிக்கு இடம். பிறகு கிச்சன். எல்லாம் 'பாஷா' இருக்கும். நான் போயி ஒருவாரம்தான் வேலக்காரி இருந்தா. தங்கச்சி ஊருக்குப் போனா, வேலக்காரியும் நின்னிட்டா.”

“ஏண்டி சுகு, உன் நாத்தனா பொண்ணா? அதென்ன உக்காத்தி வச்சி சோறு போடவா கூட்டிட்டு வந்திருக்க? சும்மா நின்னிட்டிருக்கு. வீடு பெருக்கித் துடைக்கச் சொல்லு. கிரைண்டில மாவாட்டுறதுக்குக் கசக்குதா. அவ வூட்டில கல்லுல அரய்க்கல?”ம்பா.

"மெள்ள மெள்ள எல்லா வேலையும் நானே செய்யணும்னு ஆயிட்டது. அது கூட பொறுத்துக்கலாம், அந்தாளு தம்பி அது மென்டலி ரிட்டார்ட்... அது அசட்டு சிரிப்பு சிரிச்சிகிட்டு ஏங்கிட்டயே நிக்கும். சரோ ..உம்பேரு அதான? நாங்க கூட்டிட்டுப் போரேன். என்னோட ஊரு பாக்க வரியா? கோயிலுக்கு, சினிமாக்கு என்று அசடு வழியும்.”

“ஏண்டி அவங்கிட்ட பேசுனா என்ன? முகம் காட்டாம திருப்பிக்கிற? என்று அவன் ஆத்தாக்காரி வேற. எனக்கு கோபமா வரும். மாமா சாப்புட வரப்பத்தான் கீழ வருவாங்க. காபி மாமிக் கொண்டு குடுப்பா. கார்த்திக் கராத்தே கிளாஸ், திவ்யா டான்ஸ் கிளாஸ்ன்னு மாமி காலம கூட்டிட்டுப் போவாங்க. டாக்டர் இவங்களுக்கு சொந்தக்காரங்க போல, மாமி அங்கப் போயி ரிசப்ஷனிஸ்ட்டா உக்காந்திருவாங்க.”