பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்த நல்ல நாவலைச் சாத்தியப்படுத்தி செய் நேர்த்தியுடன், பிரச்சார வாசனையின்றி, வகுப்பு எடுக்கும் தொனியின்றி உணர்ச்சி வேகத்துடன் படைத்துள்ளார்கள் ராஜம் கிருஷ்ணன்.

சகல துறைகளிலும் பெண்களின் சாதனைகளை, வேதனைகளைப் படம் பிடித்துக் காட்டும் ஆசிரியையின் உத்வேகம் இந்நாவலில் முக்கிய எல்லையைத் தொட்டுள்ளது.

பின்னணிக் குழுக்களின் கூச்சல்களின்றி, ஆரவாரத் தேர்த் தூக்கலின்றி இந்த சுயமான இலக்கிய யதார்த்த நாவல் வாசகரை நாடி வந்துள்ளது.

இந்தச் சிறந்த நாவலை வெளியிடும் வாய்ப்பினை அளித்த திருமதி ராஜம் கிருஷ்ணனுக்கு எமது நன்றி. வாசிக்கும் உங்கட்கும் நன்றி.

அகிலன் கண்ணன்
தாகம்