பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

கோடுகளும் கோலங்களும்

பிசைந்து நின்றபடியே சாப்பிடுகிறாள். தட்டைக் கழுவி வைத்துவிட்டு, உள்ளே சென்று புத்தகப் பையை எடுத்துக் கொள்கிறாள். சைக்கிள் இல்லை... நடந்தே விடுவிடென்று போகிறாள்.

“ஏய் சரோ? அடி. சரோ?”

பருத்திக் கொட்டைக் கையை நீரில் கழுவியவாறு கூப்பிடுகிறாள். அவள் திரும்பியே பார்க்கவில்லை.

யார் மீதென்று சொல்ல முடியாமல் கோபம் வருகிறது.

கருகருவென்ற மேனியும் முண்டாசுமாகக் கன்னியப்பன் வருகிறான்.

“கன்னிப்பா, சரோவ பாத்தியா?”

“ஆமாம்... போகுது. விடுசாப் போகுது. புத்தகப் பையோட...”

“ஓடிப்போய், அம்மா உன்னக் கூப்பிடுதுன்னு கூட்டிவா, கையோட..”

அவன் இவள் ஆணையை சிரமேற்கொண்டவனாக ஓடுகிறான். இவள் விடுவிடுடென்று உரலைக் கழுவுகிறாள். மாட்டுக்குக் கலக்கி வைக்கிறாள்.

அவளை அழைத்து வந்து விடுவானா?

இவள் கூப்பிட்டபோதே வராதவள், இப்போது வருவாளா?

ரேடியோ இல்லை, வீட்டில் படிக்க முடியவில்லை என்று சாக்குச் சொல்கிறாள். இது நம்பும்படி இல்லை.

ஆறாவது வருமுன்பே படிப்பை நிறுத்தி இருக்க வேண்டும். -

இந்தத் தெருவில், எந்தப் பெண்ணும் பத்துக்கு வரவில்லை. ஆறு, ஏழு, எட்டு... வயசுக்கு வந்ததும் நிறுத்திவிடுவார்கள். மகாலட்சுமி, பூரணி, யாரும் படிக்கவில்லை. நடவு, களை எடுத்தல், அறுப்பு என்று போய்க் காசு