உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ள சக்தி அடடா.... மந்திர சக்தி! எங்கள் சொற்களுக்கும் உண்டு சக்தி.... ஆனால்..... அது தந்திர சக்தி! 'சாதிகள் இல்லையடி பாப்பா என்றாய். நாங்களும் - ‘எங்கள் சாதிக்கு இணையாய் வேறு சாதிகள் இல்லையடி என்கிறோம் சங்கம் அமைக்கிறோம் சந்தா சேர்க்கிறோம் தலைவர் செயலர் பொருளர் என்று பதவிகள் பெறுகிறோம் பரிசுகள் பெறுகிறோம் தேர்தல் வந்தால் தெருத் தெருவாகச் சாதிக்கடைகளை விரிக்கிறோம்! சாக்கடை வணிகம் செய்கிறோம், பேருக்கு உன் - பிறந்த நாளிலும் உன்னைப் போன்ற உத்தமர் சிலர் உதித்த நாளிலும் சாதிகள் ஒழிக. என்று சங்கம் முழங்குகிறோம் பாரதி! 虏 கோடையும் வசந்தமும் O. 123