பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்தியின் எல்லைக்கே போய்ப் பார்த்திருந்தான்... எல்லைக்கே சென்று தொல்லைக்கே வாழ்வென்று அர்ப்பணிக்கும் வீர மறவர்கள் தேசபக்தியின் எல்லைக்கே சென்ற இலக்குவர்கள் Ο எதிரிகளின் வேட்டுகளுக்கு இம்மியும் அஞ்சாமல் காலில் பூட்ஸ்' இடுப்பில் கனமான 'பெல்ட்' முதுகில் தளவாடப் பை உடம்பில் முரட்டுச் காக்கிச் சீருடை மற்றும் ஒருகையில் துப்பாக்கி மறுகையில் கயிற்றேணிப் பிடிமானம் என்று முன்னேறும் சிறுத்தைகள் எப்பகைதான் நிற்கும்? எலிப்பகையாய் ஆகும் உமியாய் இருந்த இடம் தெரியாமல் போகும் Ο 'சற்றே விலகி இரும் பிள்ளாய்' என்று சர்வே கல்லைச் சாதுரியமாய் நகர்த்தி அடுத்தவன் நிலத்தை அபகரிக்கத் திட்டமிட்டு அப்புறம் இவனும் அவனும் குத்துவெட்டு என்றிறங்கி உச்ச நீதிமன்ற நெடிய படிக்கட்டில் ஏறி இறங்கி - எல்லோரும் மெச்சும் படியாய் எல்லைக்காகத் துடிக்கும் வேடிக்கை மனிதர்கள் பெருகும் வேளையில் இவர்கள் - விந்தை மனிதர்கள்! வீழாத தேவதைகள்! கோடையும் வசந்தமும் O 133