ஒரு பக்கம் - உன்னதமாய் இத்தேசம் உயர்வதுதான் உத்தேசம் என்று ஏணியாய்ச் காட்சிதரும் ஏந்தல்கள். இன்னொரு பக்கம் ஏறிய ஏணியினைத் தட்டிவிடும் எத்தர்கள் இவர்களால் - சாதி மத பேதச்சண்டைகள் ஊரெல்லாம் சமர்க்களமாய் மாற.... உடையும் ஓராயிரம் மண்டைகள் 'சுற்றி நில்லாதே' என்று வெளிப்பகையை விரட்டும் வீரர்கள் விளைநிலத்தில் பார்த்தீனியமாய்ப் பரவிவரும் உட்பகை பற்றி அறிந்தால் பதறித் துடிப்பார்கள்..... பற்றி எரியும் பாவம் அவர் உள்ளங்கள்! C கனவுகளில் காதல் கோட்டைகள் காதல் பள்ளிகள் காதல் கல்லூரிகள் காதல் கல்லறைகள் கட்டிக் கொண்டிருக்கும் கட்டிளங் காளையர்காள் கயிற்றுப் பாலத்தை காக்கியுடைத் தொண்டனை கொஞ்சம் கண்கொட்டாமல் பாருங்கள் ஊருக்கு நூறுபேர் ஒன்றாய்ச் சேருங்கள் ஒற்றுமைப் பாலத்தை உருவாக்க வாருங்கள்: தமிழன் எக்ஸ்பிரல் கொடுத்த படத்துக்காக எழுதிய தமிழன் எக்ஸ்பிரஸ் தீபாவளி மல 134 0 மீரா
பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/135
Appearance