பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவப்பு விளக்கே! உன்னை மீறி ஒரடி எடுத்துவைக்க முடியுமா? சிவனிடமிருந்து நெற்றிக் கண்ணைச் சீதனமாய்ப் பெற்றாயோ..... வம்ச விருத்திக்கு வகையற்றுக் கிடக்கும் வானத்துச் சூரிய சந்திர விளக்குகள், ஒற்றையாய்த் தானே உலா வருகின்றன; உனக்கோ ஊரெங்கும் பிள்ளைகள் உலகெங்கும் பிள்ளைகள் எங்கும் தமிழ் எதிலும் தமிழ்போல் என்னைப் பார் என் அழகைப்பார் என்று நட்டநடுவீதியில் நாகரிகமாய் நிற்கிறாய்; இந்த அரசுக்கு இப்படி ஒரு யோசனை ஏன் இன்னும் உதிக்கவில்லையோ ஒவ்வொரு வீட்டுப் பள்ளியறையிலும், கோடையும் வசந்தமும் 0 167