இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தர்மத்தை கொன்றுவிட்ட பேர்களிடம் இரக்கத்தை எப்படி நான் போதிப்பது? இரக்கம் ஈகையென்ற பெயராலே சிலர் இங்கே இலவசமாய் வேட்டி புடவைகள் விநியோகம் செய்கின்றார் நெரிசலிலே சிக்கி சிலர் மூச்சு நிற்கிறது. இரக்கத்தால் சிலர் இங்கே இறக்கத்தான் முடிந்தது. தனிநபர் ஈகைகள் தர்மகர்த்தா ஈகைகள் தேவைதான் என்றாலும் பெருகிவரும் ஏழ்மையினை வறுமையினை எதிர்கொள்ள முடியாது...... தலைமுறைகள் கடந்து நிற்கும் தத்துவத்தால் சமதர்தத் தத்துவத்தால் தான் இந்த அகிலம் பிழைக்கும்.... எல்லார்க்கும் எல்லாம் என்கின்ற திட்டத்தால் இலட்சியச் சட்டத்தால் மட்டுமே இந்த அகிலம் தழைக்கும் ஆம்.... அகிலம் தழைக்கும்! கோடையும் வசந்தமும் 0 175