விளக்குகிறார். பலவிதப் பாம்புகளை வருணனை யாக்குகிறார். பாம்பு பொதுவாக ஒரு பாலியற் குறியீடு. தமிழில் பாம்பு பற்றிய கதைகள் பல உண்டு. பழமொழிகள் பல உண்டு. மலையாள மொழியல் பாம்பு என்று நவீனம் ஒன்று உண்டு. மீராவின் பாம்புகள் அந்தப் பாம்பையும் நினைவூட்டுகின்றன. பசும்புல் தரையில் வழுக்கிக் கொண்டு நழுவியோடும் நல்ல பாம்பு போல பாம்புகள் பற்றிய கவிதையிலும் ஒட்டமிருக்கிறது. மீராவின் எழுத்தில் இழையோடும் இயல்பான நகைச்சுவைக்கு 'புதிய ஏற்பாடு', 'எங்கள் முதலாளி", 'பிரியத்துக்குத் தடையாய் ஒரு பிளாட்பாரம் டிக்கெட்', 'காமதேனு போல; கற்பக தருபோல', 'சிறியோர்கள் நிச்சயித்தபடி ஆகிய கவிதைகளைக் காட்டலாம். ஒடிய முயலும் இடையெனவும், கூந்தலை கொட்டாத கறுப்பு நீர் வீழ்ச்சியெனவும், நுங்கின் மென்பதம் தங்கும் இதழ்கள் எனவும், ஆற்றை 'குடிக்காமல் கூத்தாடும் குமரிப்பெண் எனவும், எடுத்து மடிக்காமல் கிடக்கின்ற காகிதம் எனவும் வருணிக்கும் வரிகளில் மீராவின் கற்பனைத் திறம் வெளிப்படுவதை அறியலாம். கவிஞரின் சமுதாயப் பார்வை கூர்மையானது மாத்திரமல்ல கோபமும் கொந்தளிப்புமானது. இத்தொகுதியில் பல கவிதைகள் அவருடைய மனச்சீற்றத்தின் வெளிப்பாட்டு அடையாளங்கள். அவற்றுள் ஒன்று உழவன்' என்ற தலைப்பிலான நீண்ட கவிதை. பிராமிசரிகளின் கொத்தடிமையான இம்மண்ணின் நிஜமைந்தன், உலகளந்த பழமொழிப் பாராட்டுகளின் முத்திரைக் காயங்களால் முதுகு புண்ணானவன். அவனை I8
பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/20
Appearance