இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
படை திரட்டப் பாடுகிறேன் பொன்னுக்கோ, இல்லை புகழுக்கோ பாடவில்லை; என் மனிதச் சாதி எழுச்சிக்கே பாடுகிறேன் கீழ்மேல் என்றின்னும் கிறுக்கில் உளறுகின்ற பாழ்வாய் கிழிக்குமொரு படை திரட்டப் பாடுகிறேன். ஊழ்வினையாம் சேற்றில் உள்ளத்தை அடியோடே மூழ்கவிடும் பேதையரை முன்னேற்றப் பாடுகிறேன்! O பொன்னுக்கோ, இல்லை புகழுக்கோ பாடவில்லை மன்பதையின் ஞான மலர்ச்சிக்கே பாடுகிறேன்! கோடையும் வசங்கமம் O 31