இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
Ο தேர்தல் முடிந்தாலும் தீரப் போவதில்லை சுவரொட்டி மனப்பான்மை கல்தோன்றி மண்தோன்றி சுண்ணாம்பு தோன்றி சுவர்தோன்றி விட்டது. வெற்றிவிழாச் சுவரொட்டி வீழ்ச்சியுற்ற போதிலும் நாகரிகமாக நன்றிசொல்லும் சுவரொட்டி மந்திரியாய் வருகின்ற மகத்துவத்தைப்பாராட்டி வட்டச்செயல் வீரர் வடிவேலு வண்ணமுத்து அஜ்மல்கான் அலெக்ஸ் என்று அடியில் பெயர்பொறிக்கும் வரவேற்புச் சுவரொட்டி கல்யாணச்சுவரொட்டி காதுகுத்துச் சுவரொட்டி புதுவீடு கட்டிப் புகுந்தால் சுவரொட்டி செத்தால் சுவரொட்டி செல்வாக்குக் காட்டும் பித்தால் சுவரொட்டி பெருகிவரக் காண்கின்றோம். சீட்டுக் கம்பெனி சின்ன முதலாளி ஒட்டலிலே தின்று உருண்டு புரண்டு கோடையும் வசந்தமும் 0 69