பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கோப்பெருந்தேவியர் யூட்டும் வீரமொழிகளைக் கிளர்ச்சியொடும் உணர்ச்சி யொடும் விளம்பினன். பாண்டியன் பகர்ந்த வஞ்சினம் 'வீரர்களே! நம் பகைவர்களாகிய சேரனும் சோழ னும் நம்மைப் போரில் எதிர்த்தற்கு ஒல்லையூர் நாட்டு எல்லையில் வந்துள்ளனர். அவரைப் போரில் அலற அலறத் தாக்கிப் புறங்காட்டி ஓடுமாறு யான் செய் யாது போனல், இதோ! என் அருகில் இருக்கும் அழகே உருவான அரசியைப் பிரிந்து வருந்துவேனுக! நடுநிலை பிறழாது நல்லறம் கூறும் எனது அறங் கூறவையத்தே மறம் பயின்ற கொடியோன் ஒருவனே இருத்தி, காட்டின் அமைதியைக் குலத்த கொடுங் கோலன் என்று குடிமக்கள் துாற்றும் பழியுறுவேனுக! மாவன், ஆந்தை, அந்துவஞ்சாத்தன், ஆதனழிசி, இயக்கன் முதலான என் கண்போன்ற இனிய நண்பர் களே இழந்து நட்பாடல் தேற்ருத நயமிலி என்று நாட்டினர் துாற்றும் கேட்டினே கண்ணுவேகை ! வளமும் நலமும் கெழுமிய பாண்டி காட்டை யாளும் பெருங்குடி மரபில் பிறத்தல் நீங்கிச் சிறிதும் வள மில்லாத வன்னிலத்தைக் காக்கும் நலமில்லாத இழி குலத்துப் பிறப்பேகை' பாண்டியன் மீளாப் பிரிவு இங்ங்னம் பூதப்பாண்டியன் தன் பொரு படை வீரர்க்குப் பெருவிரமூட்டும் அரிய வஞ்சின மொழி களைப் பகர்ந்தான். தன் படையுடன் சென்று இரு பெரு வேந்தரையும் ஒல்லேயூர் எல்லேயில் எதிர்த்தான். பெரும் படையுடன் தாக்கிய அப் போரில் பூதப்