பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூதப்பாண்டியன் தேவி 77 பாண்டியன் வெற்றி கொள்ள முடியவில்லை. போர்க் களத்தில் பகைவரால் விழுப்புண்பட்டு இறந்தான் பூதப்பாண்டியன். அவன் தன் தேவியுடன் இணை பிரியாது வாழ்ந்து வந்தவன். அவன் அரசியல் அலுவல் காரணமாகச் சிறுபொழுது பிரிவானுயினும் அதனைத் தாங்குதற்குத் தேவி பெரிதும் வருந்துவார். அத் துணைப் பேரன்பு பூண்ட பெருங்கோப்பெண்டினத் தனியே விட்டுப் பாண்டியன் மீளாப் பிரிவினை மேற் கொண்டான். இத்தகைய பெரும்பிரிவைப் பொறுப் பரோ பூதப்பாண்டியன் தேவி ! பெருங்கோப்பெண்டின் பெருந்துயர் பூதப்பாண்டியன் ஒல்லையூர்ப் போர்க்களத்தில் உயிர்நீத்த செய்தியைத் தேவி உணர்ந்தார்; கண்ணிர் சொரிந்து கதறி அழுதார் அறிவினும் உருவினும் திருவினும் ஆற்றலினும் பிற கலங்கள் அனைத்தினும் தம்மோடு ஒத்த தலைவனகிய பாண்டியனைப் பிரிந்து பெருங்தேவி உயிர்வாழ்வரோ உள்ளமும் உடலும் சோர்ந்து தரையில் விழுந்தார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்தார். 'கணவன் இறந்தான் என்ற செய்தி அறிந்ததும் தன்னுயிர் கொண்டு அவ னுயிர் தேடுவது போல உயிரைப் போக்குவதே மக வளிர்க்குத் தலையாய கற்புடைமையாகும் , யான் அதனைச் செய்தேனில்லை ; கணவன் இறந்ததும் நெருப்பை மூட்டி அதனுள் பாய்ந்து மாய்வதே இடைக் கற்புடைய மகளிரின் செயலாகும் ; கணவன் இறந்தபின் உலகில் உயிருடன் வாழ்ந்து மறுமையில் அக் கணவனைப் பெறுதற் பொருட்டுக் கைம்மை நோன்பினைக் கைக்கொண்டு இல்லில் இருத்தல் கடைக்