பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கோப்பெருந்தேவியர் கற்புடையார் செயலாகும் , யானே தலைக்கற்புடையார் செயலைப் புரியத் தவறிவிட்டேன் இனி இடைக் கற்புடைய மகளிரைப் போன்று நெருப்புள் குதித்து உயிரை விடுப்பேன்' என்று உறுதி பூண்டார். தேவி தீயுள் பாயச் செல்லுதல் இங்ஙனம் உறுதி பூண்ட அரசியார் ஏவலாளரை அழைத்துக் காட்டின் நடுவே அமைந்த காடுகிழாள் ஆகிய கொற்றவை திருக்கோவிலுக்கு முன்னர் நெருப்பை வளர்க்குமாறு பணித்தார். அங்ங்னமே களிறுகளால் கொண்டு வரப்பெற்ற கரிய முருட்டுக் கட்டைகளே அடுக்கிப் பணியாளர் கொடுகெருப்பை வளர்த்தனர். பெருங்கோப்பெண்டாகிய பூதப்பாண் டியன் தேவி அந் நெருப்பில் விழுதற்காக ரோடிப் புறப்பட்டார். அவருடைய அவிழ்த்துவிட்ட நெறித்த கருங்கூந்தலினின்று நீர் வடிந்துகொண்டிருக்கவும் கண் களினின்று கண்ணிர் ஆருகப் பெருகவும் காடு நோக்கி மெல்ல கடந்து சென்ருர். பேராலவாயர் பேரிரக்கம் கோப்பெருந்தேவியின் அவலக் கோலத்தை ஆங்கு கின்ற மதுரைப் பேராலவாயர் என்னும் பெரும்புலவர் கண்ணுற்ருர், அவரது உள்ளம் அனலிற் பட்ட மெழு கென உருகியது. ஐயோ! இவ் அரசியார் சிறுபொழுது கூடக் கணவனைப் பிரிந்திருக்கப் பொருதவர். பூதப் பாண்டியன், முழவோசை இடையருது முழங்கிக் கொண்டிருக்கும் பகற்பொழுதுதானே இது, காவலர் கண்ணிமையாது காத்து நிற்கும் கடும்பகல் கேரக் தானே இது என்று தேவியைச் சற்றுப் பிரிவானுயி