பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூதப்பாண்டியன் தேவி 79. னும் பெரிதும் கலங்கி நடுங்கும் பெற்றியரன்ருே ! இத்தகையார் எங்ங்னம் கணவனைப் பிரிந்து உயிர் வாழ்வர் ' என்று உள்ளுருகிப் பாடினர். யானை தந்த முளி மர விறகின் கானவர் பொத்திய ஞெலிதி விளக்கத்து மடமான் பெருநிரை வைகுதுயில் எடுப்பி மக்தி சீக்கும் அணங்குடை முன்றிலின் நீர்வார் கூந்தல் இரும்புறம் தாழப் போளுர்க் கண்ணள் பெருங்காடு நோக்கித் தெருமரும் அம்ம தானே; தன் கொழுநன் முழவுகண் துயிலாக் கடியுடை வியன கர்ச் சிறுநணி தமியள் ஆயினும் - இன்னுயிர் கடுங்கும்தன் இளமைபுறங் கொடுத்தே." என்பது மதுரைப் பேராலவாயர், தீப்பாயப் புகுந்த தேவியின் நிலைகண்டு நெஞ்சம் இரங்கிப் பாடிய செஞ் சொற் பாடலாகும். சான்ருேர் வேண்டுகோள் பூதப் பாண்டியன் இறந்த பின்னர் பாண்டிய காட்டு அரசினே நடாத்துதற்குத் தக்கார் எவரும் இலர். ஆதலின், சான்ருேர் பலர் ஒருங்கே தோன்றித் தீப்பாயப் புகுந்த தேவியைத் தடுத்து நிறுத்த முயன்ற னர். பெருங்கோப் பெண்டாகிய பூதப் பாண்டியன் தேவி பேரறிவுடையாராதலின் அவரே அரசினை ஏற்று இனிது நடத்தலாம் என்று எண்ணினர். அதனல் தேவியே விேர் நெருப்பினுள் புகாது நாடாளும் பொறுப்பினை ஏற்க வேண்டும்' என்று அவரை விருப் புடன் வேண்டினர். அரசினை இழந்து அல்லலுறும் காட்டைக் காக்கும் கல்ல நோக்குடன் நாயகன் இறந்த பின்னும் இன்னுயிர் வாழ்தல் அரசர் குல மகளிர்க்குத் தகுமென்று பலவாறு அறிவுறுத்தினர்.