பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'80 கோப்பெருந்தேவியர் சான்ருேர்க்கு இடித்துரைத்தல் சான்ருேர் பலர் தடுத்துக் கூறும் அறிவுரைகளேக் கேட்ட அரசியார் அளவற்ற சினங்கொண்டார். தம்மைத் தடுத்து கிறுத்த முயலும் அன்னவரைப் "பொல்லாச் சூழ்ச்சியினர்' என்று இடித்துரைத்தார். 'கணவன் இறந்தமையால் அவனுடன் உயிர் விடுதலே கற்புடைய மகளிரின் கடமை என்று அறிவுரை கூறு வதன்ருே சான்ருேர் கடனுகும். விேர் அவ்வாறு கூருவிடினும் யான் அன்பும் கடமையும் கொண்டு தீப்பாயத் துணிந்தால் அதற்குத் துணையாகவேனும் கிற்க வேண்டும் , அதனையும் செய்யாது என்னைத் தடுத்து நிறுத்துகிறீர்களே! விேர் உண்மையில் சான் ருேர் அல்லர், துங்கள் செயல் சான்ருண்மைக்கே இழுக்கை விளப்பதாகும்; மற்றைய மகளிரைப்போல என்னேயும் எளிதாக எண்ணிவிட்டீர்களோ? வெள்ளரி விதையைப்போல நீரில் கிடக்கும் பழஞ்சோற்றை நெய் கலவாமல் புளியிட்டு வெந்த வேளைக் கீரையோடும் எள்ளுத் துவையலோடும் கலந்து உண்டு, பருக்கைக் கற்கள் உறுத்தும் பாழுந்தரையில் பாயில்லாமல் படுத் துறங்கி வருந்தும் கைம்பெண்டிரைப் போல வாழும் வாழ்வை யான் விரும்பமாட்டேன்; இக் காட்டிடையே வளர்த்த கடுகெருப்பு என்னேச் சுடுமே என்று விேர் நினைக்கின்றீர்கள் : திண்டோள் கொண்ட கொழுநன இழந்த எனக்கு இந் நெருப்பும் குளிர்ந்த ர்ே நிறைந்த தாமரைத் தடாகமும் ஒரு தன்மையனவாகும். ஆதலால் யான் இப்போதே நெருப்பில் வீழ்ந்து உயிர் துறப்பேன்' என்று இங்ங்ணம் பூதப் பாண்டியன்தேவி, தடுத்த சான்ருேரை இடித்துரைத்துக், கொழுந்துவிட் டெரிந்தபெருந்தியுள் புகுந்து மாய்க்தார்.