பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூதப்பாண்டியன் தேவி 81 தேவியின் தீந்தமிழ்ப் புலமை இங்ங்னம் கணவன் பிரிவிற்கு ஆற்ருது உயிர்த்ேத கோப்பெருந்தேவியாகிய பூதப் பாண்டியன் தேவி இடைக் கற்புக்கு ஏற்றதோர் எடுத்துக்காட்டாவார். இவர் கோப்பெருந்தேவியாகத் திகழ்ந்ததோடு அல்லா மல் அருந்தமிழ்ப் புலவராகவும் விளங்கியது வியத் தற்கு உரியதாகும். இவர் தீயுள் பாயுங்கால் சான் ருேரை விளித்துப் பாடிய, 'பல்சான் றிரே! பல்சான் ஹீரே! செல்களனச் சொல்லாது, ஒழிக.என விலக்கும் பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே ! அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ங் திட்ட காம்போல் கல்விளர் நறுநெய் திண்டாது அடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம், வெள்ளெட் சாங்தொடு புளிப்பெய்து அட்ட வேளை வெங்தை வல்சி யாகப், பரல்பெய் பள்ளிப் பாயின்று வதியும் உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ ! பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம் துமக்கு அரிதாகுக ! தில்லl எமக்கு, எம் பெருங்தோள் கணவன் மாய்ந்தென, அரும்பற வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை கள்ளிரும் பொய்கையும் தீயும்ஒ சற்றே!', -புறம் - உசசு என்னும் பாடல் இவரது புலமைச் சிறப்பையும் புகழ் மிகுந்த கற்பு மாண்பையும் நன்கு புலப்படுத்துவதாகும்.