138
கபோதிபுரக்
“அந்தப் போட்டோ – அதனைக் கொடுத்துவிடு. உனக்குக் கோடி புண்ணியம் உண்டு. உன் பிள்ளைக் குட்டிகளுக்குப் புண்ணியம். ஒரு குடும்பத்தைக் கெடுக்காதே” என்று கருப்பையா வேண்டினான். “உளறாதே கருப்பையா! குடும்பத்தை நானா கெடுத்தேன்” என்று கோபித்தான் வேலன்.
கருப்பையா, வேலன் காலில் விழுந்தான். வேலன், “சரி. சரி, சர்வமங்களம் உண்டாகட்டும்! எழுந்திரு. நான் சொல்வதைக் கேள். முடியாது என்று சொல்லக்கூடாது. நாளைக் காலைக்குள் எனக்கு ஆயிரம் ரூபாய் வேண்டும். கொடுத்தால் நாங்கள் போய்விடுகிறோம். இல்லையேல் நீயும் ராதாவும் போக வேண்டிய இடத்துக்குப் போகத்தான் வேண்டும்” என்றான் வேலன்.
“ஆயிரம் ரூபாயா...என்னிடம் இருப்பதே கொஞ்சந்தானே,” என்றான் கருப்பையா.
“கிடைத்தற்கரிய செல்வத்தைப் பெற்ற நீயா ஒரு ஆயிரம் ரூபாய்க்கு அஞ்சுவது,” என்றான் வேலன்.
“சரி,” என ஒப்புக் கொண்டான் கருப்பையா. ஆனால் ஆயிரம் ரூபாய் தந்ததும் போட்டோவைத் (நெகடிவுடன்) தன்னிடம் தந்துவிட வேண்டுமெனப் பேரம் பேசினான்.
“அது முடியாது. ஆயிரம் ரூபாய், நான் வெளியே போவதற்கு! படத்தை நான் வெளியிடாதிருப்பதற்கு, மாதா மாதம் 200 ரூபாய், தவறாமல் என் சென்னை விலாசத்துக்கு அனுப்பிக் கொண்டு வரவேண்டும். நான் கண்டிப்பான பேர்வழி. ஒருமுறை பணம் வருவது தவறினாலும், படம் வெளிவந்தால், என்ன ஆகும் என்பது உனக்கே தெரியும். ராதா கர்ப்பவதியல்லவா! அவள் பிள்ளை தெருவில் அலைய வேண்டித்தான் வரும்” என்று வேலன் “கண்டிஷன்கள்” போட்டான்.
“ஐயா! உனக்குக் கருணை இல்லையா” என்று கெஞ்சினாள் கருப்பையா.