பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

கிறேன்! போடும் உடை! ஐயோ. தெய்வமே! உடையமாட்டாாயா ! உடைந்துவிடு! நீ உடைந்து போ...!

புதுமைப்பித்தனின் 'சிற்பியின் நரகம்' கூறும் சிற்ப சரத்தனைப் போலவே, எல்லாச் சிற்பிகளும் தங்கள் கலா சிருஷ்டிகளின் நிலையை உணர்ந்து புழுங்குவார்கள்; சபிப்பார்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

கோயில்கள் கலையின் சமாதிகளாதிவிட்டன. கர்ப்பக்கிருக இருள் தான் அங்கு சாமி கும்பிட வருவோர் மனத்திலும் பார்வையிலும்! அவர்கள் கலையைப் பற்றி என்ன கண்டார்கள் ?

பழந் தமிழ் மன்னர்கள் கலைஞர்களைக் கெளரவித்தார்கள். ஆனால் கலையை சமாதிகட்டி வைத்து விட்டார்கள்! அவர்கள் நினைவு நல்லெண்ணமே. ஆனால் விளைவுதான் விபரிதமாயிற்று.

திறமை பெற்றும் உழைப்புக்குத் தக்க கூலியும், மதிப்பும் பெறாத கலைஞர்களின் திறமையை ஊக்குவிக்க மன்னர்கள் கோபுரங்களையும், கல் தூண் மண்டபங்களையும் கட்டப் பணித்தார்கள். கலா சிருஷ்டிகளைப் படைக்கத் தூண்டினார்கள். கலைஞர்களின் கைத்திறனை சக்தியை எல்லோரும் வந்து பார்க்கட்டும் எனப் பணித்தார்கள். மக்கள் வந்தார்கள். கலையின் செளந்தர்யத்தைக் கண்டு, மனித சக்தியை வியக்கும் ரசனை அவர்களிடம் இல்லை. அமானுஷிக சக்தி என எண்ணித் தலை வணங்கினார்கள். விழுந்து கும்பிட்டார்கள். பிறகு தலை குனிந்து கும்பிட்டு வரம் கேட்பதே வேலையாயிற்று. கலை காரிருளில் சிக்கியது,

சிற்பக்கலைக்கு மட்டுமல்ல இந்தக் கதி. சகல கலைகளுக்கும் சேர்ந்த விபத்து இதான். தேவ அடி