பக்கம்:கோயில் மணி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

கோயில் மணி

“கணக்காக அஞ்சு வருஷகாலந்தான் ஆச்சு அம்மா. உங்களை நான் எங்கெங்கோ தேடினேன். இங்கே புதுவீடு கட்டிக்கொண்டு வந்துவிட்டீர்கள் போல் இருக்கிறது.”

“ஆமாம்; எத்தனை நாளைக்கு வாடகை வீட்டில் குடி இருக்கிறது? நமக்கு என்று ஓர் இடம் இருந்தால் நம்முடைய பிரியப்படி ஏதாவது செடி கொடி போட்டுக் கொள்ளலாம். உனக்குக் குழந்தைகள் உண்டா”

“அதில் ஒன்றும் குறைவு இல்லை, அம்மா. இரண்டு பேர் இருக்கிறார்கள்.”

“அது சரி, நீ ஏன் கல்யாணமாகிச் சில மாதங்களுக்குப் பிறகு வரவே இல்லே?”

செங்கமலத்துக்குக் கல்யாணம் ஆனது எனக்குத் தெரியும். ஒரு வகையில் நானும் அந்தக் கல்யாணத்திற்குக் காரணமாக இருந்தேன். அக்காலத்தில் வேறு ஒரு வீட்டில் குடியிருந்தோம். தினந்தோறும் நாராயணன் பூக்கொண்டு வந்து தருவான். அவன் வராத இரண்டு மூன்று நாள் செங்கமலத்தினிடம் பூ வாங்கினேன். அதனுல் அவர்களுக்குள்ளே சிறு பூசல், கடைசியில் அது கல்யாணமாக முடிந்தது.

கல்யாணத்துக்குப் பிறகு இரண்டு மூன்று மாதங்கள் செங்கமலம் பூக்கொண்டு வந்து கொடுத்தாள்; பிறகு காணவில்லை. நாங்கள் இந்தப் புது வீட்டுக்கு வந்து விட்டோம். வந்து மூன்று ஆண்டுகள் ஆயின.

செங்கமலம் இப்போது வாடிய முகமும் மெலிந்த உடம்புமாகக் காட்சியளித்ததைக் கண்டு என் மனம் மிகவும் வேதனைப்பட்டது. அவள் தன் கதையைச் சொன்னாள்.

“இவருக்கு ஒரு மாமன் கடலூரில் இருந்தார். அவர் அங்கே தோட்டம் போட்டிருந்தார். இவரை அங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/124&oldid=1384131" இலிருந்து மீள்விக்கப்பட்டது