பக்கம்:கோயில் மணி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒட்டுறவு

143

“உடம்பு கொஞ்சம் சரியில்லை.”

“என்ன உடம்பு?”

"அசதி!"

“இவ்வளவுதானே? நளினியைப் பேசச் சொல்லுங்கள். ஒரு முக்கியமான சமாசாரம்.

“என்னிடமே சொல்லலாம்.”

“மன்னிக்கவேண்டும். அம்மாளையே கூப்பிடுங்கள்.”

“உன்னையே கூப்பிடுகிறாள்.”

நளினி பேசினாள். மறு நாளுக்கு மறுநாள் டெல்லியிலிருந்து மகளிர் முன்னேற்றச் சங்கத் தலைமை அலுவலகத்தின் தலைவி வருகிறாளாம். அவளை வரவேற்க வேண்டுமாம். பரதநாட்டியம் பார்க்க வேண்டுமென்று அந்தத் தலைவி ஆசைப்படுகிறாளாம். அதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். நளினியால்தான் அது முடியும்.

அதைக் கேட்டவுடனே நளினிக்கு உற்சாகம் வந்துவிட்டது. எல்லாவற்றையும் மறந்தாள். லண்டனில் இந்தியத் தூதுவராக இருந்த அம்மாள் அவள், அவளுக்குப் பரதநாட்டியம் பார்க்க வேண்டுமென்று ஆசையிருந்தால் அதற்கு ஏற்பாடு செய்வது எவ்வளவு, பெரிய காரியம்! “தமயந்தி, எங்கே, அந்த மருந்தை எடு; குடிக்கிறேன். எனக்கு ஜுரம் இல்லை. உடம்பு வலிதான் இருக்கிறது. அது ஒன்றும் பிரமாதம் இல்லை. மகளிர் சங்கத் தலைவி டெல்லியிலிருந்து வருகிறாளாம். பரதநாட்டியத்துக்கு ஏற்பாடு செய்யவேண்டும். கானலதாவுக்குச் சொல்லியனுப்பலாமா? நாமே போய்ப் பார்த்துவிட்டு வரலாமா?”

“உனக்கு உடம்பு சரியில்லையே!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/149&oldid=1384230" இலிருந்து மீள்விக்கப்பட்டது