பக்கம்:கோயில் மணி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போடாத செருப்பு

43

“போயிருக்கிறாரே!” என்று பதில் சொன்னாள் அவள்.

“செருப்பு இங்கே இருக்கிறதே!” என்றார் குப்புசாமி.

“அதை எப்போதும் அவர் போட்டுக் கொள்கிறதில்லை. அதிக வெயிலாக இருந்தால் போட்டுக் கொள்வார். செருப்புச் சீக்கிரம் பிய்த்துவிடக் கூடாது என்பது அவர் எண்ணம்.”

“செருப்புப் பிய்ந்தால், புதுச் செருப்பு வாங்கிக் கொள்கிறது.”

“ஆறு ஏழு ரூபாய் இல்லாமல் புதுச் செருப்பு வருமா? அப்படியெல்லாம் செலவழித்துக் கொண்டிருந்தால், எங்களுக்குக் கட்டுமா, அண்ணாத்தை?” என்று அவள் கூறிய போது குப்புசாமிக்கு இரக்கமாக இருந்தது. .

அந்தப் செருப்புப் பழையது. போட்டுக் கொண்டு வேகமாக நடந்தால், பிய்ந்துவிடும் நிலையில்தான் இருந்தது. புதுச் செருப்பு வாங்கக்கூட யோசிக்கும் நிலையில் காளிமுத்து இருப்பதை எண்ணிக் குப்புசாமி மிகவும் வருந்தினார்.

ரு நாள் அந்தச் செருப்பைக் காணவில்லை. காளிமுத்து அதைத் தேடித் தேடிப் பார்த்தார்; காணவில்லை. இனியாவது புதுச் செருப்பு வாங்குவார் என்று எதிர் பார்த்தார் குப்புசாமி. காளிமுத்து வாங்குவதாகத் தெரிய வில்லை “என்ன தம்பி, புதுச் செருப்பு ஒன்று வாங்கிப் போட்டுக் கொள்ளக் கூடாதா? மாசம் ஐந்து ருபாய் சாமிக்கு அபிஷேகம் செய்யச் செலவழிக்கிறாயாமே! ஒரு மாசம் அதை நிறுத்திச் செருப்பு வாங்கிக்கொள்ளக் கூடாதா?” என்று கேட்டார் குப்புசாமி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/49&oldid=1382833" இலிருந்து மீள்விக்கப்பட்டது