பக்கம்:கோயில் மணி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

கோயில் மணி

“ஒரு வருஷந்தானே ஆகியிருக்கும்? அதற்குள் அந்தச் செடியை மொட்டை யடிக்கலாமா ?”

“தழை பறித்தால் என்ன ? மறுபடியும் வளர்கிறது. அதற்குத்தானே அது இருக்கிறது?”

“அன்றைக்கு எனக்கு இந்த ஞானம் இல்லையே; உன்னை வீணாக வைதேனே! உனக்கு நான் என்ன செய்யப் போகிறேன்!” என்றார் நெஞ்சம் நெகிழ.

“அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். உங்கள் மரத்திலிருந்து நிறையக் கொத்துக் கொத்தாக ஒடிக்க வேண்டிய நிலை வரும். அப்போது தழைக்குத் தழை கொடுத்து விடுங்கள்.”

“சின்னப்பா, அப்படிச் சொல்லாதே; உனக்கு அந்த நிலை வரவேண்டாம்; போதும், ஒரு தடவை வந்தது!”

“என்ன ஐயா, அப்படிப் பயந்து போகிறீர்கள். மறுபடியும் அம்மை பூட்டவேண்டும் என்றா நான் சொல்கிறேன் ? வேறு சந்தர்ப்பம் வரத்தான் போகிறது.”

முத்துசாமிக்கு அவன் குறிப்பு விளங்கவில்லை; “என்னப்பா சொல்கிறாய்?” என்று கேட்டார்.

“அந்தக் குழந்தை போனபோதே முண்டகக்கண்ணியம்மாளை வேண்டிக்கொண்டேன். கொடுத்ததைத் திரும்பக் கொடுத்தால் அந்தக் குழந்தைக்கு வேப்பிலைப் பாவாடை கட்டி உன் சந்நிதிக்கு அழைத்துக்கொண்டு வருகிறேனென்று வேண்டிக் கொண்டிருக்கிறேன்.”

“அது எப்போது நடக்கிறதோ , நான் உனக்குக் கடனாளியாகி விட்டேன்” என்றார் முத்துசாமி.

“அப்படிச் சொல்லாதீர்கள். முண்டகக்கண்ணியம்மாள் கண்கண்ட தெய்வம். அவள் கண் பார்த்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/76&oldid=1383941" இலிருந்து மீள்விக்கப்பட்டது