பக்கம்:கோயில் மணி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

கோயில் மணி

கணக்கில் நிற்க நிழலின்றி உண்ண உணவின்றித் திண்டாடினார்கள்.

அங்கங்கே உள்ள பொதுக் கட்டிடங்களையும் பள்ளிக்கூடங்களையும் ஏழைகளுக்குகத் திறந்து விட்டார்கள். அரசியலாரும், நகர மன்றத்தினரும் பல இடங்களில் உணவு சமைத்து ஏழைகளுக்கு வழங்கினர். பல கழகங்கள் உடைகளைத் தொகுத்து அளித்தன. நாள் தோறும் பத்திரிகைகளில் இங்கே இத்தனை பேர் வீடு இழந்தனர், அங்கே அத்தனைகுடிசைகள் பாழாயின, இந்த இடத்தில் இத்தனை ஏழைகள் தங்கியிருக்கிறார்கள் என்று செய்திகள் வந்து கொண்டே இருந்தன.

இத்தகைய சந்தர்ப்பங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் சிலர் ஏழைகளிடம் பரிவுள்ளவர்களைப் போலப் பேசியும், இப்போது பதவியிலிருக்கும் ஆட்சியாளர்களை ஏசியும் தொண்டைத் தண்ணீரை வற்ற அடித்துக் கொண்டிருந்தார்கள். பரபரப்பும் சுறுசுறுப்பும் உடையவர்களாய், அங்கே இத்தனை பேருக்கு உணவு கொடுக்கச் செய்தேன், இங்கே இத்தனை பணம் கொடுத்து வந்தேன் என்று கலப்பில்லாத பொய்களையும் முக்கால் பொய்களையும் அளந்து வந்தார்கள்.

இந்த ஆரவாரத் தலைவர்களின் கண்ணுக்குப் புலப்படாமல் மெளனமாக விளம்பரம் இன்றி ஏழைகளுக்கு உதவி செய்யும் மக்களும் தொண்டர் கூட்டத்தினரும் அங்கங்கே பல நல்ல செயல்களைச் செய்து வந்தார்கள். அப்படி ஒரு பகுதியில் பஜனை செய்யும் சங்கம் ஒன்று பலரிடம் அரிசி, பருப்பை வாங்கி ஓரிடத்தில் சமையல் செய்து ஏழைகளுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்தது.

அந்தச் சங்கத்தில் எந்த விழா நடத்தினாலும் ஏழைகளுக்கு உணவு வழங்குவது என்பது இன்றியமையாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/80&oldid=1383950" இலிருந்து மீள்விக்கப்பட்டது